Published:Updated:

ஆந்திரா: தமிழக மாணவர்களை சரமாரியாகத் தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்! - என்ன நடந்தது?

தமிழக மாணவர்கள் மீது தாக்குதல் ஆந்திரா

ஆந்திராவில் சுங்கச்சாவடி அருகே தமிழக சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது, சுங்கச்சாவடி ஊழியர்கள் சரமாரியாகத் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆந்திரா: தமிழக மாணவர்களை சரமாரியாகத் தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்! - என்ன நடந்தது?

ஆந்திராவில் சுங்கச்சாவடி அருகே தமிழக சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது, சுங்கச்சாவடி ஊழியர்கள் சரமாரியாகத் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
தமிழக மாணவர்கள் மீது தாக்குதல் ஆந்திரா

ஆந்திர மாநிலம், வடமாலாப்பேட்டை சுங்கச்சாவடியில், ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்த தமிழக சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது, சுங்கச்சாவடி ஊழியர்கள் சரமாரியாகத் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழக மாணவர்கள் மீது தாக்குதல் ஆந்திரா
தமிழக மாணவர்கள் மீது தாக்குதல் ஆந்திரா

திருப்பதியில் தனியார் சட்டக்கல்லூரியில் படித்துவரும் தமிழக மாணவர்கள் சிலர் தேர்வெழுதிவிட்டு காரில் ஊருக்குத் திரும்பியிருக்கின்றனர். அப்போது வடமாலாப்பேட்டை சுங்கச்சாவடியில், fastag மூலம் சுங்கக் கட்டணம் செலுத்தும்போது, சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும், தமிழக மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. வெறும் வாக்குவாதம் ஒருகட்டத்தில் இருதரப்பினருக்குமிடையே தாக்குதலாக முற்றியது.

தமிழக மாணவர்கள் மீது தாக்குதல் ஆந்திரா
தமிழக மாணவர்கள் மீது தாக்குதல் ஆந்திரா

சுங்கச்சாவடி ஊழியர்கள் இரும்புக்கம்பி போன்றவற்றால் தமிழக மாணவர்களைச் சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், போலீஸார் அங்கு வந்ததும், மோதல் கலைக்கப்பட்டது. மேலும், சுங்கச்சாவடி ஊழியர்களின் தாக்குதலில் காயமடைந்த தமிழக மாணவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், தாக்குதலின்போது போலீஸார் ஒருதலைப்பட்சமாக நடந்துகொண்டதாக மாணவர்கள் குற்றம்சாட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.