Published:Updated:

ஆசிட் குடிக்கவைத்து, கொடுமைப்படுத்திய மாமியார்... பரிதாபமாக உயிரிழந்த மருமகள் - அஸ்ஸாமில் அதிர்ச்சி

மருமகளை ஆசிட் குடிக்கவைத்துக் கொடுமைப்படுத்திய மாமியார் ( சித்தரிப்புப் படம் )

அஸ்ஸாம் மாநிலத்தில் மாமியார், மருமகளை ஆசிட் குடிக்கவைத்துக் கொடுமைப்படுத்தியதில், மருமகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அஸ்ஸாம் மாநிலம், கரீம்கஞ்ச் மாவட்டத்திலுள்ள பைரப்நகர் பகுதியில், ஷகீல் அகமது - சும்னா பேகம் தம்பதியர் வசித்துவந்தனர்.

மருமகளை ஆசிட் குடிக்கவைத்துக் கொடுமைப்படுத்திய மாமியார்
மருமகளை ஆசிட் குடிக்கவைத்துக் கொடுமைப்படுத்திய மாமியார்

இவர்களின் குடும்பத்தில், கடந்த சில நாள்களாகவே சும்னா பேகத்தை, கணவர் ஷகீல் அகமதுவும், மாமியாரும் சித்ரவதை செய்துவந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சும்னா பேகம் உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஷகீல் அகமதுவும், இவரின் அம்மாவும் சும்னா பேகத்தை ஆசிட் குடிக்கவைத்துக் கொடுமைப்படுத்தியதால்தான் அவர் உயிரிழந்தார் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக சும்னா பேகத்தின் குடும்பத்தினர், போலீஸில் புகாரளித்ததன் அடிப்படையில், ஷகீல் அகமது மீது வழக்கு பதிவுசெய்து போலீஸ் விசாரித்துவருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

போலீஸ்
போலீஸ்

இந்தச் சம்பவம் தொடர்பாக ஊடகத்திடம் பேசிய கரீம்கஞ்ச் மாவட்ட எஸ்.பி பத்மநாப் பாருவா, ``சும்னா பேகம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அங்கு அவர் உயிரிழந்துவிட்டார். இதில், கடந்த சில நாள்களாகவே கணவர், மாமியாரால் மனதளவிலும் உடலளவிலும் சும்னா பேகம் சித்ரவதை செய்யப்பட்டிருக்கிறார் எனத் தெரிகிறது. எனவே நாங்கள் அவரின் கணவரைக் கைதுசெய்து வழக்கு பதிவுசெய்திருக்கிறோம்" எனக் கூறினார்.