Published:Updated:

திருடிவிட்டு மக்களிடமிருந்து தப்பிக்க போலீஸுக்கே போன் செய்த நபர்! - அடுத்து நடந்ததென்ன?

திருடன் கைது

வங்காளதேசத்தில் ஒரு திருடன், கொள்ளையடித்துவிட்டு மக்களிடமிருந்து தப்பிப்பதற்காக போலீஸுக்கே போன் செய்த சம்பவம் பலரை ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது.

திருடிவிட்டு மக்களிடமிருந்து தப்பிக்க போலீஸுக்கே போன் செய்த நபர்! - அடுத்து நடந்ததென்ன?

வங்காளதேசத்தில் ஒரு திருடன், கொள்ளையடித்துவிட்டு மக்களிடமிருந்து தப்பிப்பதற்காக போலீஸுக்கே போன் செய்த சம்பவம் பலரை ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
திருடன் கைது

`பலநாள் திருடன் ஒருநாள் திருடன் அகப்படுவான்' என்பதைப்போல திருடன் என்றைக்காவது ஒருநாள் கையும் களவுமாகத் மாட்டிக்கொள்வான். ஆனால், வங்காளதேசத்தில் ஒரு திருடன், கொள்ளையடித்துவிட்டு மக்களிடமிருந்து தப்பிப்பதற்காக போலீஸுக்கே போன் செய்த சம்பவம் பலரை ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது.

திருடன்
திருடன்
மாதிரி புகைப்படம்

40 வயதான யாசின் கான் என்பவர் கடந்த புதன்கிழமை அதிகாலை வேளையில், கொள்ளையடிப்பதற்காகத் தெற்கு பாரிசல் நகரிலுள்ள மளிகைக் கடையின் கதவை உடைத்து உள்ளே சென்றிருக்கிறார். பின்னர், வந்த வேலை முடிந்தது எனத் திருடிவிட்டு வெளியே செல்வதற்குள் பொழுது விடிய ஆரம்பித்துவிட்டது. சந்தையில் மக்கள் நடமாட்டமும் ஆரம்பித்துவிட்டது. சுதாரித்துக்கொண்ட யாசின் கான், எங்கு மாட்டிக்கொண்டு மக்களின் தாக்குதலுக்கு ஆளாகிவிடுவோமோ என பயந்து, உதவிக்காக போலீஸுக்கு போன் செய்து கெஞ்சியிருக்கிறான்.

திருடன் கைது
திருடன் கைது

அதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், யாசின் கானை மக்களிடமிருந்து காப்பாற்றி, கைதுசெய்து சிறையிலடைத்தனர். மேலும் இதன் மூலம், யாசின் கான் அந்தப் பகுதியில் ஏற்கெனவே பல திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டிருப்பதையும் போலீஸார் கண்டறிந்தனர். பின்னர் இது குறித்துப் பேசிய தலைமை காவல் அதிகாரியொருவர், ``என்னுடைய வாழ்க்கையில் இதுபோன்ற சம்பவத்தை நான் பார்த்ததேயில்லை" என்று தெரிவித்தார்.