Published:Updated:

திருவாரூர்: துப்பாக்கி முனையில் நடந்த வங்கிக் கொள்ளை! - கொள்ளையர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை

வங்கி கிளை
வங்கி கிளை

கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 7-ம் தேதி மதியம் இந்த வங்கி கிளைக்குள் 7 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென உள்ளே நுழைந்தது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள தனியார் வங்கியில் கடந்த 2018-ம் ஆண்டு சில மர்ம நபர்கள் துப்பாக்கியோடு உள்ளே நுழைந்து பணம், நகைகளை கொள்ளையடித்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கொள்ளையர்களை பிடிக்க திருவாரூர் மாவட்ட காவல்துறையினர், உடனடியாக தனிப்படைகள் அமைத்து, தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு, 7 நபர்களை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு மன்னார்குடி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் 5 பேருக்கு தலா 10 ஆண்டுகளும், ஒருவருக்கு 9 ஆண்டுகள், மற்றொருவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டணையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர்: துப்பாக்கி முனையில் நடந்த வங்கிக் கொள்ளை! - கொள்ளையர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி உள்ள அசேஷம் என்ற பகுதியில் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் கிளை செயல்பட்டு வந்தது. கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 7-ம் தேதி மதியம் இந்த வங்கி கிளைக்குள் 7 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென உள்ளே நுழைந்தது. வங்கி மேலாளரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, வங்கியில் இருந்த ரூ.5,58,550 ரொக்கம், 84 கிராம் நகைகளை அந்த மர்ம கும்பல் கொள்ளையடித்துச் சென்றது. அச்சம்பவம் மன்னார்குடி பகுதியில் மட்டுமல்லாமல், தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக இவ்வங்கியின் கிளை மேலாளர் கோவிந்தராஜன் கொடுத்த புகாரின்பேரில், மன்னார்குடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். கொள்ளையர்களை உடனடியாக பிடிக்க, அப்போதைய திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தனிப்படைகள் அமைத்தார். தீவிர தேடுதல் வேட்டையில் ஏழு பேர் கைது செய்யப்பட்டார்கள். இந்த கொள்ளை வழக்கு விசாரணை மன்னார்குடி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் ஜெயசங்கர் வாதாடினார்.

திருவாரூர்: துப்பாக்கி முனையில் நடந்த வங்கிக் கொள்ளை! - கொள்ளையர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை

அவ்வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி பிரேமாவதி, வங்கி கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த மரியசெல்வம்(35), மீரான் மைதீன்(31), சுடலைமணி(31), மதுரை மாவட்டம் கருப்பாயூரணி அயூப்கான்(29), ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையைச் சேர்ந்த ராஜா(35) ஆகிய 5 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், தூத்துக்குடியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனையும், சுடலைமணி என்ற மணிகண்டனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு