Published:Updated:

பார் ஊழியர் கொலை; ரயில் தண்டவாளத்தில் வீசிவிட்டுத் தப்பிக்க முயன்ற உரிமையாளர் சிக்கியது எப்படி?

கொலை

முத்து பாரிலிருந்து நான்காயிரம் ரூபாயைத் திருடியுள்ளார். இதையறிந்த முருகன் முத்துவிடம் கேட்டபோது, `பணத்தை எடுத்தது நான்தான். முடிந்தால் என்னைப் பிடி’ என சவால்விட்டிருக்கிறார்.

பார் ஊழியர் கொலை; ரயில் தண்டவாளத்தில் வீசிவிட்டுத் தப்பிக்க முயன்ற உரிமையாளர் சிக்கியது எப்படி?

முத்து பாரிலிருந்து நான்காயிரம் ரூபாயைத் திருடியுள்ளார். இதையறிந்த முருகன் முத்துவிடம் கேட்டபோது, `பணத்தை எடுத்தது நான்தான். முடிந்தால் என்னைப் பிடி’ என சவால்விட்டிருக்கிறார்.

Published:Updated:
கொலை

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு பகுதியில் ரயில்வே பாலத்தின் அருகே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வெட்டுக்காயங்களுடன் கிடந்த இளைஞரின் சடலத்தை மீட்ட அம்மையநாயக்கனூர் போலீஸார், குற்றவாளிகளைத் தனிப்படை அமைத்து விசாரித்துவந்தனர்.

இந்நிலையில் கொடைரோடு பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்தபோது சந்தேகத்துக்குரிய கார் ஒன்று அம்மையநாயக்கனூரைக் கடந்து நிலக்கோட்டை சாலையில் சென்றது. அதே கார் மீண்டும் கொடைரோடு சுங்கச்சாவடியையும் கடந்து சுற்றிக்கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் சந்தேகமடைந்த போலீஸார் காரின் உரிமையாளரான திருப்பூர் மாவட்டம், பல்லடத்தைச் சேர்ந்த முருகன் என்பவரைப் பிடித்து விசாரித்தபோது பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின.

கைதானவர்கள்
கைதானவர்கள்

இது குறித்து போலீஸாரிடம் விசாரித்தோம். ``சிவகங்கை மாவட்டம், கமுதி பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (36). தற்போது திருப்பூர் மாவட்டம், பல்லடம் மகாலட்சுமி நகரில் வசிக்கும் இவர், அதே பகுதியில் அசைவ உணவகம் நடத்திவருகிறார். மேலும் அதே பகுதியில் தனியார் ஏசி மதுபான பார் ஒன்றையும் நடத்திவருகிறார். இந்த பாரில் கேஷியராக தேனி மாவட்டம், போடியைச் சேர்ந்த முத்து (32) என்பவர் பணியாற்றிவந்திருக்கிறார்.

இந்நிலையில் முத்து பாரிலிருந்து நான்காயிரம் ரூபாயைத் திருடிச் சென்றிருக்கிறார். இதையறிந்த முருகன் முத்துவிடம் கேட்டபோது, ``பணத்தை எடுத்தது நான்தான். முடிந்தால் என்னைப் பிடித்துப் பார்” எனச் சவால்விட்டிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த முருகன், தனது பாரில் வேலை பார்த்துக்கொண்டிருந்த ஊழியர்களுடன் பல்லடம் பஸ்ஸில் ஏறி தப்பிச்செல்ல முயன்ற முத்துவைத் தேடிப் பிடித்து பாருக்கு அழைத்து வந்துள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கொலையான முத்து
கொலையான முத்து

அங்கு வைத்து முத்துவைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். அப்போது ஒருவர் உருட்டுக்கட்டையை எடுத்து முத்துவின் தலையில் அடித்ததில் நிகழ்விடத்திலேயே முத்து மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இதையடுத்து பதறிய முருகன், முத்துவின் உடலை அகற்ற திட்டமிட்டுள்ளார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முதற்கட்டமாக சினிமா பட பாணியில் முத்துவின் கழுத்தை அறுத்து தலையைத் துண்டிக்க முயன்றிருக்கின்றனர். அதில் பயமும் பதற்றமும் அதிகரிக்கவே, முத்துவின் உடலை முருகன் தனது காரில் தூக்கிப் போட்டுக்கொண்டு கூட்டாளிகளுடன் தனது சொந்த ஊரான கமுதி நோக்கி விரைந்திருக்கிறார்.

போலீஸாருக்குப் பாராட்டு
போலீஸாருக்குப் பாராட்டு

காரில் சென்றுகொண்டிருக்கும்போதே விடியத் தொடங்கிவிட்டதால் ஏற்பட்ட பயத்தின் காரணமாக கொடைரோட்டை அடுத்த அம்மையநாயக்கனூர் ரயில்வே பாலம் அருகே முத்துவின் உடலை இறக்கியவர்கள், ரயில் விபத்தில் உயிரிழந்ததுபோல ரயில்வே தண்டவாளத்தில் முத்துவின் உடலை வீசிவிடலாம் என முடிவெடுத்துள்ளனர். பிறகு உயிரிழந்த முத்துவின் உடலை அங்கு போட்டுவிட்டுத் தப்பியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவர்கள் பயன்படுத்திய காரில் ஒட்டி இருந்த ஃபாஸ்ட்டேக், குற்றவாளிகள் கிளம்பியது முதல் திரும்பிச் சென்றது வரை அனைத்து விவரங்களையும் காட்டிக் கொடுக்க, `பிணத்தை வீசிவிட்டோம்... யாருக்கும் தெரியாது’ என நினைத்துக்கொண்டு கொலையாளிகள் அனைவரும் மீண்டும் அவரவர்கள் சொந்த வேலைக்குத் திரும்பியிருந்த வேளையில் அனைவரையும் சுற்றிவளைத்துப் பிடித்தோம். இறந்த முத்துவும் சாதாரணமான ஆள் இல்லை. `என்ஜிஓ நடத்துகிறேன், சமூக சேவை செய்கிறேன், நிருபர்...’ எனக் கூறி பல்வேறு சீட்டிங் வேலைகளில் ஈடுபட்டுவந்துள்ளார். கடைசியாக தினமும் குடிக்க வேண்டும் என்ற நிலைக்கு வந்துதான் பாரில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். அங்கும் வழக்கமான வேலையைக் காட்டியதால் அவரின் வாழ்க்கை கொலையில் முடிந்துள்ளது” என்றனர்.

பாராட்டு
பாராட்டு

இந்தக் கொலை தொடர்பாக முக்கியக் குற்றவாளியான ஏசி பார் உரிமையாளர் முருகன், அவரின் கூட்டாளிகள் மருது செல்வம், கோபால், கார்த்திக், கவின், டென்னிஸ் ஆகியோரை போலீஸார் கைதுசெய்தனர். கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதங்கள், காரைப் பறிமுதல் செய்தனர். பிறகு முருகன் உள்ளிட்ட ஆறு பேர் மீது கொலை வழக்கு பதிவுசெய்த போலீஸார், அவர்களை நிலக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். துரிதமாகச் செயல்பட்டு குற்றவாளிகளைக் கைதுசெய்த தனிப்படை போலீஸாரை திண்டுக்கல் சரக டிஐஜி ரூபேஷ்குமார் பாராட்டினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism