Published:Updated:

ஒரு வருட பேப்பர் பணம்; வசூலிக்கச் சென்ற ஏஜென்டை   'ஸ்குரூ ட்ரைவரால்' குத்திய வியாபாரி கைது!

பன்னீர் செல்வம்
பன்னீர் செல்வம்

வத்தலக்குண்டு அருகே மாத சந்தா வசூலிக்கச் சென்ற பேப்பர் ஏஜென்டை ஸ்குரூ ட்ரைவரால் குத்திய பாஜக பிரமுகரை விருவீடு போலீஸார் கைது செய்தனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே விருவீடு பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(60). இவர் விருவீடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பேப்பர் ஏஜென்டாக உள்ளார். இதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருபவரும், பாஜக பிரமுகருமான கண்ணன் (40),  பன்னீர்செல்வத்திடம் பேப்பர் வாங்கி வந்துள்ளார். கடந்த ஒரு வருடமாக பேப்பர் வாங்கியதற்கு கட்டணம் செலுத்தாமல் இருந்துள்ளார். நேற்று முன்தினம் கண்ணனிடம் மாதச் சந்தா பணத்தை வாங்குவதற்கு பன்னீர் செல்வம் சென்றுள்ளார். அப்போது கண்ணன் பணம் தர மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கண்ணன் ஸ்க்ரூட்ரைவரால் பன்னீர்செல்வத்தை தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தி விட்டு தப்பி விட்டார். இதில் பலத்த காயமடைந்த பன்னீர்செல்வம் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் ரத்தம் கொட்டிய நிலையில் பன்னீர் செல்வத்தை திண்டுக்கல் அரசு மருத்துவனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

சென்னை: `மனைவிக்கும், அவருடைய ஆண் நண்பருக்கும் கத்திக்குத்து' - போலீஸில் சரணடைந்த கணவன்!
கண்ணன்
கண்ணன்

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில், விருவீடு காவல் சார்பு-ஆய்வாளர் கலையரசன் தலைமையிலான போலீஸார் தலைமறைவாக இருந்த கண்ணனை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். பேப்பர் ஏஜென்ட் பன்னீர்செல்வம் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு திண்டுக்கல் வத்தலகுண்டு பகுதி பேப்பர் ஏஜென்ட்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாஜகவில் வத்தலகுண்டு ஒன்றிய துணைத் தலைவராக இருந்துவந்த கண்ணனின் செயல்பாடுகள் சரியில்லாத காரணத்தால் இரண்டு மாதங்களுக்கு முன் கட்சிப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு