Published:Updated:

பீகார்: லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு; சுகாதாரத்துறை அதிகாரி படுக்கையின் கீழ் கட்டுக்கட்டாகப் பணம்!

பணம் எண்ணப்படுகிறது

பீகாரில் சுகாதாரப்பிரிவு அதிகாரி ஒருவர், தான் சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தை தனது படுக்கைக்கு கீழே மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

பீகார்: லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு; சுகாதாரத்துறை அதிகாரி படுக்கையின் கீழ் கட்டுக்கட்டாகப் பணம்!

பீகாரில் சுகாதாரப்பிரிவு அதிகாரி ஒருவர், தான் சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தை தனது படுக்கைக்கு கீழே மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

Published:Updated:
பணம் எண்ணப்படுகிறது

பீகார் மாநிலத்தில் சுகாதாரத்துறையின் மருந்து பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ஜிதேந்திர குமார். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதோடு மருந்து கம்பெனிகள், மருந்து கடைகளில் மிரட்டிப் பணம் பறிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இப்புகார் குறித்த ஆரம்பகட்ட விசாரணைக்குப் பிறகு திடீரென குமார் வீட்டில் அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். குமார் பணியாற்றி வரும் பாட்னா உட்பட நான்கு இடங்களில் ஒரே நேரத்தில் இந்த ரெய்டு நடத்தப்பட்டது. ரெய்டில் அதிகாரிகளே நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு ஜிதேந்திர குமார் வீட்டிலிருந்து தங்கம், வெள்ளி ஆபரணங்கள், பல கோடி மதிப்பு சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட பணம்
பறிமுதல் செய்யப்பட்ட பணம்

அதோடு ஐந்து சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. வீட்டில் முழுமையாக சோதித்து பார்த்தபோது ஜிதேந்திர குமாரின் படுக்கைமீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டு, அதனை சோதித்து பார்த்தபோது பண்டல் பண்டலாக பணம் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. படுக்கைக்கு கீழே முழுக்க முழுக்க பணமாகவே இருந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அங்கேயே எண்ண ஆரம்பித்தனர். அவற்றை எண்ணி முடிக்க பல மணி நேரம் பிடித்தது. அதிகாரிகள் வங்கி அதிகாரிகளின் துணையில்லாமல் தாங்களே அனைத்து பணத்தையும் எண்ணியதால் பல மணி நேரம் பிடித்தது. பணத்தை எண்ண இரண்டு மெஷின்களும் பயன்படுத்தப்பட்டன.

அனைத்து பணமும் 100, 2,000 ரூபாய் நோட்டுகள் ஆகும். அவற்றின் முழுமையான மதிப்பு நள்ளிரவு வரை மதிப்பீடு செய்து முடிக்கப்படவில்லை. அவற்றை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். பணம் மட்டுமே 3 கோடி இருந்தது. இது தவிர பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் ஒரு கிலோ என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பணிக்கு சேர்ந்த ஓர் ஆண்டில் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்துள்ள ஜிதேந்திர குமார், சொந்தமாக பார்மஸி கல்லூரி ஒன்றை நடத்தி வருகிறார். இவர் பல கோடி ரூபாய்க்கு சொத்து வாங்கிய ஆவணங்களும் சிக்கியிருக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!