Published:Updated:

``மோடி கொடுத்த ரூ.5.5 லட்சம், அதை செலவு செய்தேன்"- வங்கி அதிகாரிகளைக் கலங்கடித்த ஆசாமி!

கோப்பு காட்சி
கோப்பு காட்சி

பீகாரில் ஒருவரின் வங்கிக்கணக்கிற்கு தவறுதலாக வந்த 5.5 லட்சத்தை பிரதமர் நரேந்திர மோடிதான் அனுப்பி இருக்கிறார் என்று கூறி திரும்ப கொடுக்க மறுத்து அதனை செலவு செய்துவிட்டார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் நேரத்தில் ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கிலும் தலா 15 லட்சம் வரவு வைக்கப்படும் என்று கூறியதாகச் செய்திகள் வெளியானது. வெளிநாட்டு வங்கியில் இருக்கும் கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கிலும் தலா ரூ.15 லட்சம் செலுத்துவதாக வந்த அந்தச் செய்தியை அடிப்படையாக வைத்து அதிக அளவில் மீம்ஸ்கள் உலாவின. பீகாரில் ககாரியா மாவட்டத்தில் உள்ள பக்தியூர்பூர் என்ற கிராமத்தை சேர்ந்த ரஞ்சித் தாஸ் என்பவரது வங்கிக்கணக்கிற்கு வங்கி நிர்வாகம் தவறுதலாக 5.5 லட்சத்தை வரவு வைத்துவிட்டது. வங்கி கணக்கிற்கு பணம் வந்தவுடன் ரஞ்சித் தாஸ் பணத்தை எடுத்துச் செலவு செய்துவிட்டார். வங்கி நிர்வாகம் தவறு நடந்திருப்பதைக் கண்டுபிடித்து ரஞ்சித் தாஸிடம் பணத்தைத் திரும்ப செலுத்தும்படி கேட்டதற்கு, எனக்கு பிரதமர் நரேந்திர மோடிதான் ரூ.5.5 லட்சத்தை கடந்த மார்ச் மாதம் அனுப்பி இருக்கிறார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14,000 கோடி மோசடி; நிரவ் மோடி நேரில் ஆஜராக மும்பை கோர்ட் உத்தரவு!
பிரதமர் நரேந்திரமோடி
பிரதமர் நரேந்திரமோடி

அனைவருக்கும் 15 லட்சம் தருவேன் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்திருந்தார். அதில் முதல் தவணையாகத்தான் ரூ.5.5 லட்சத்தை எனது வங்கிக்கணக்கில் செலுத்தி இருக்கிறார். அந்த பணத்தை எடுத்து செலவு செய்துவிட்டேன். இப்போது வங்கியில் பணம் இல்லை. பணத்தை திரும்ப கொடுக்க முடியாது" என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். வங்கி அதிகாரிகள் தாஸ் வீட்டிற்கே நேரில் சென்று பணத்தை திரும்பக் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டும் அவர் மறுத்துவிட்டார். இதனால் என்ன செய்வது என்று தெரியாத வங்கி அதிகாரிகள் இதுகுறித்து தாஸ் மீது போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் வழக்கு பதிவு செய்து தாஸை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தவறு செய்த வங்கி அதிகாரி ரூ.5.5 லட்சத்தை வங்கிக்கு செலுத்தவேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு