Published:Updated:

சைக்கிளில் சென்ற 70 வயது முதியவர்; கார் மோதி 8 கி.மீ வரை இழுத்துச் செல்லப்பட்டு பலியான சோகம்..!

கார் ( சித்திரிப்பு படம் (ட்விட்டர்) )

பீகாரில் முதியவர் மீது மோதிய கார், அவரை 8 கி.மீ இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சைக்கிளில் சென்ற 70 வயது முதியவர்; கார் மோதி 8 கி.மீ வரை இழுத்துச் செல்லப்பட்டு பலியான சோகம்..!

பீகாரில் முதியவர் மீது மோதிய கார், அவரை 8 கி.மீ இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
கார் ( சித்திரிப்பு படம் (ட்விட்டர்) )

பீகார் மாநிலம், கிழக்கு சம்பாரண் மாவட்டத்திலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் சங்கர் சௌதூர் என்ற 70 வயது முதியவர் சைக்கிளில் சென்றுகொண்டிருந்திருக்கிறார். அப்போது பாங்க்ரா சௌக் அருகே NH 27- சாலையைக் கடக்கும்போது, கோபால்கஞ்ச் நகரிலிருந்து வேகமாக வந்த கார், சைக்கிள் மீது மோதியிருக்கிறது. இதில் நிலைத்தடுமாறிய முதியவர் காரின் பானட்டில் சிக்கி, அதைப் பிடித்து தொங்கியிருக்கிறார். மேலும், கார் ஓட்டுநரிடம் காரை நிறுத்துமாறு கத்தியிருக்கிறார்.

ஆனால், ஓட்டுநருக்கு முதியவர் கத்தியது கேட்டதா எனத் தெரியவில்லை. அவர் காரை நிறுத்தாமல் சென்றிருக்கிறார். அதைப் பார்த்த பொதுமக்கள் காரை நிறுத்துமாறு கூச்சலிட்டிருக்கின்றனர். மேலும் சிலர் காரைப் பின்தொடர்ந்து சென்றிருக்கிறார்கள். 8 கி.மீ தூரத்துக்குப் பிறகு அதைக் கவனித்த ஓட்டுநர், காரை உடனே நிறுத்தியிருக்கிறார்.

மரணம்
மரணம்

அதனால் காருக்கு முன்புறம் விழுந்த முதியவர் மீது, காரை ஏற்றிவிட்டு ஓட்டுநர், காரில் இருந்தவர்கள் அனைவரும் தப்பி ஓடிவிட்டதாகத் தெரிகிறது. இதில் படுகாயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கிப் பலியானார். காரின் உரிமையாளரை காவல்துறை அதிகாரிகள் தேடிவருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.