Published:Updated:

சொத்துப் பிரச்னை; அண்ணனைக் கடத்தி ஆந்திராவில் தவிக்கவிட்ட தங்கை!

தங்கை வச்லா
தங்கை வச்லா

சென்னையில் சொத்துத் தகராறில் அண்ணனை காரில் கடத்திய தங்கை குடும்பத்தோடு கைதுசெய்யப்பட்டார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை செம்பியம், டி.டி.தோட்டம், முதல் தெருவைச் சேர்ந்தவர் புருஷோத். ஆட்டோ டிரைவர். இவருக்கு வாணி என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். தரைத்தளத்தில் புருஷோத்தின் அப்பாவும் அம்மாவும், முதல் மாடியில் குடும்பத்தோடு புருஷோத்தும் குடியிருந்துவருகின்றனர். இவரின் தங்கை வச்லா. இவர் சிட்லபாக்கத்தில் குடும்பத்தோடு குடியிருந்துவந்தார். புருஷோத்துக்கும் அவரின் தங்கை வச்லாவுக்கும் சொத்துப் பிரச்னை இருந்துவருகிறது. நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது. தற்போது, வச்லா சிட்லபாக்கத்திலிருந்து புருஷோத் குடியிருக்கும் வீட்டின் மேல் பகுதியில் குடியிருந்துவருகிறார்.

கடத்தல்
கடத்தல்
Representation Image

கடந்த 5-ம் தேதி காலை 8:30 மணியளவில் புருஷோத் ஆட்டோவில் வேப்பேரி ரித்தர்டன் ரோடு வழியாகச் சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்தப் பகுதியிலுள்ள பல் மருத்துவமனை அருகே ஆட்டோவை நிறுத்திவிட்டுக் கீழே இறங்கி நின்றார். ஆட்டோவைப் பின்தொடர்ந்து வச்லா, அவரின் கணவர் லோகநாதன், மகன்கள் ஜெயராமன், ருத்ரன் உட்பட ஏழு பேர் காரில் வந்தனர். அவர்கள் புருஷோத்தை வலுகட்டாயமாகக் காரில் ஏற்றினர். அப்போது புருஷோத் சத்தம் போட்டிருக்கிறார். அதனால் அந்தக் கும்பல் புருஷோத்தின் கை கால்களை கயிற்றால் கட்டியது. பின்னர் புருஷோத்தின் ஆட்டோவை ஜெயராமன் என்பவர் எடுத்துச் செல்ல, கார் அங்கிருந்து புறப்பட்டது. ஆட்டோவை எடுத்துச் சென்ற ஜெயராமன் ஐ.சி.எஃப் பகுதியில் காரில் ஏறிக்கொண்டார்.

கத்திமுனையில் புருஷோத்தை மிரட்டிய அந்தக் கும்பல், காரை ஆந்திரா அருகிலுள்ள சத்தியவேடு பகுதியில் நிறுத்தியது. அங்கு வைத்து புருஷோத்தை அந்தக் கும்பல் சரமாரியாகத் தாக்கியது. அப்போது புருஷோத்தின் செல்போன், பர்ஸ் ஆகியவற்றையும் அந்தக் கும்பல் பறித்தது. இதையடுத்து அந்தப் பகுதியில் புருஷோத்தின் கை கால்களிலிருந்த கட்டுகளை அவிழ்த்துவிட்டு அங்கிருந்து அந்தக் கும்பல் தப்பிச் சென்றது. இதையடுத்து சத்தியவேடு பகுதியிலிருந்து புருஷோத் சென்னைக்கு வந்தார். பின்னர் இந்தக் கடத்தல் சம்பவம் குறித்து வேப்பேரி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 120 (b), 294 (b), 341, 323, 363, 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து புருஷோத்தைக் கடத்தியவர்களைத் தேடிவந்தார்.

வச்லாவின் கணவர் லோகநாதன்
வச்லாவின் கணவர் லோகநாதன்
'உங்க மகன் உசுரோட வேணும்னா 3 கோடி ரூபாய் பணத்தோட வாங்க!' - திருப்பூரில் நடந்த கடத்தல் சம்பவம்!

இதற்கிடையில் அண்ணனைக் கடத்திய குற்றச்சாட்டில் புருஷோத்தின் தங்கை வச்லா, அவரின் கணவர் லோகநாதன், மகன்கள் ருத்ரன், ஜெயராமன் ஆகிய நான்கு பேரை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். வச்லா, அதிமுக-வைச் சேர்ந்தவர் என விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இந்த வழக்கில் தொடர்புடையவர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு