Published:Updated:

சென்னை: `மனைவிக்கும், அவருடைய ஆண் நண்பருக்கும் கத்திக்குத்து' - போலீஸில் சரணடைந்த கணவன்!

கொலை
கொலை

சென்னையில் மனைவியின் ஆண் நண்பரைக் கத்தியால் குத்திக் கொலைசெய்த கணவர், காவல் நிலையத்தில் சரணடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மனைவி சிகிச்சை பெற்றுவருகிறார்.

சென்னையை அடுத்த செங்குன்றம் அருகேயுள்ள கிராண்ட்லைன் தனலட்சுமி நகரைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (37). இவர், எடப்பாளையம் பஜாரில் வெல்டிங் கடை நடத்திவந்தார். இவருக்குத் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இவரின் கடையில் பாடியநல்லூரைச் சேர்ந்த லோகேஸ்வரி (37) என்பவர் உதவியாளராக வேலை பார்த்துவருகிறார். இவரின் கணவர் லட்சுமணன் (40). இவர் டெய்லராக வேலை செய்துவருகிறார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

கொலை
கொலை

இந்தநிலையில், லோகேஸ்வரிக்கும் ராஜ்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதை லோகேஸ்வரியின் கணவர் லட்சுமணன் கண்டித்தார். அதோடு மனைவி லோகேஸ்வரியை ராஜ்குமாரின் கடைக்கு வேலைக்குச் செல்ல வேண்டாம் என லட்சுமணன் கூறினார். ஆனால் அதைக் கேட்காத லோகேஸ்வரி, வேலைக்குச் சென்றார். அதனால் ஆத்திரமடைந்த லட்சுமணன், நேற்றிரவு ராஜ்குமாரின் வெல்டிங் கடைக்குச் சென்றார். அப்போது ராஜ்குமாரும் லோகேஸ்வரியும் பேசிக்கொண்டிருந்தனர்.

அதைப் பார்த்த லட்சுமணன், கையில் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து இருவரையும் சரமாரியாகக் குத்தினார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இருவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்தனர். இருவரையும் மீட்டு பாடியநல்லூர் அரசு சுகாதார மையத்துக்கு அனுப்பிவைத்தனர். அங்கு ராஜ்குமார் உயிரிழந்துவிட்டதாக டாக்டர் தெரிவித்தார்.

சென்னை: டாஸ்மாக் கடையில் நடந்த மோதல்; பழிக்குப் பழியாக நடுரோட்டில் நடந்த கொலை!
கைது
கைது
representational image

மேல்சிகிச்சைக்காக லோகேஸ்வரி, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இது தொடர்பாக சோழவரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து லட்சுமணனைத் தேடிவந்தனர். இந்தநிலையில் இன்று அதிகாலை கத்தியோடு லட்சுமணன், காவல் நிலையத்தில் சரணடைந்தார். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. விசாரணைக்குப் பிறகு லட்சுமணன் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மருத்துவமனையில் லோகேஸ்வரி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் அவரின் கணவர் லட்சுமணனன் சிறைக்குச் சென்றுவிட்டார். அதனால் இந்தத் தம்பதியரின் குழந்தைகள் ஆதரவற்ற நிலையில் உள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு