Published:Updated:

திமுக பிரமுகர் ஜோயல் முதல் சீமான் வரை ஏமாற்றிய நபர் கைது; என்ன நடந்தது?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
திமுக பிரமுகர் ஜோயலை ஏமாற்றிய சிவக்குமார்
திமுக பிரமுகர் ஜோயலை ஏமாற்றிய சிவக்குமார்

திமுக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வழக்கறிஞர் ஜோயல், காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என பட்டியல் போட்டு இளைஞர் ஒருவர் பணத்தை ஏமாற்றியிருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திமுகவின் மாநில இளைஞரணித் துணைச் செயலாளர் வழக்கறிஞர் ஜோயல். இவரின் ஜூனியர் வழக்கறிஞர் விஜயகுமார், சென்னை மத்திய குற்றப்பிரிவில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, ``நான் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளேன். தி.முக இளைஞரணித் துணைச் செயலாளர் வழக்கறிஞர் எஸ்.ஜோயலிடம் ஜூனியர் வழக்கறிஞராக உள்ளேன். கடந்த செப்டம்பர் 18-ம் தேதி மதியம் 12 மணியளவில் வழக்கறிஞர் ஜோயலுக்கு ஒரு செல்போன் அழைப்பு வந்தது. அதில் பேசியவர், தான் தூத்துக்குடியைச் சேர்ந்தவன் என்றும் தன்னுடைய பெயர் நாகராஜன் என்றும் கூறி அறிமுகப்படுத்தினார்.

வழக்கறிஞர் ஜோயல்
வழக்கறிஞர் ஜோயல்

பின்னர் தனக்கு குழந்தை பிறந்து 14 நாள்களாகிறது. புதுச்சேரியில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக இன்குபேட்டரில் வைத்துள்ளதாகவும் தினமும் ஊசிகள் போட வேண்டும் என்றும் அதற்கு பணம் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார். கூகுள்பே மூலம் பணம் அனுப்புமாறு கூறினார். மேலும் மருத்துவமனையில் குழந்தை இருப்பது போன்ற படமும் மருத்துவமனை கொடுத்ததாக ஒரு கடிதம் ஆகியவற்றையும் வாட்ஸ்அப்பில் அனுப்பி வைத்தார்.

`சாதி பார்த்து வேண்டாம்; நான் தமிழர் என்பதற்காக வாக்களித்தால் போதும்!’ - நெல்லையில் சீமான்

வழக்கறிஞர் ஜோயல் அவசர பணி நிமித்தமாக இருந்த காரணத்தாலும் மருத்துவ உதவி அவசரம் என்பதாலும் மேற்கொண்டு எதுவும் விசாரிக்காமல் என்னை அழைத்து உரிய உதவியை செய்யுமாறு கூறியதையடுத்து நான் அவருடைய மற்றொரு உதவியாளர் தினகரனிடம் கூறி பணம் அனுப்புமாறு கூறினேன். அதன்படி 15,000 ரூபாயை கூகுள்பே மூலம் அனுப்பியுள்ளார். எனவே சம்பந்தப்பட்ட நாகராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் உதவி கமிஷனர் வேல்முருகன், மோசடி வழக்கு பதிவு செய்து நாகராஜன் எனக்கூறி ஏமாற்றிய சிவக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்து வழக்கறிஞர் ஜோயலிடம் பேசினோம். ``என்னுடைய செல்போனில் தொடர்புகொண்ட நாகராஜன், தன்னுடைய சொந்த ஊர் தூத்துக்குடி என்று கூறினார். பின்னர் உதயநிதி ஸ்டாலின், அவரின் உதவியாளர் செந்தில் ஆகியோரிடம் தன்னுடைய குழந்தைக்கு தினமும் ஊசி போட வேண்டும் அதற்கு பண உதவி கேட்டேன். அவர்கள்தான் ஜோயலிடம் கேட்கும்படி கூறியதாகத் தெரிவித்தார். அதோடு வாட்ஸ்அப் நம்பருக்கு குழந்தையின் போட்டோ, மருத்துவரின் ஆவணங்களையும் அனுப்பி வைத்தார். அதைப்பார்த்தபிறகுதான் கூகுள்பே மூலம் 15,000 ரூபாயை அனுப்பி வைத்தேன். அதன்பிறகு தலைமையிடம் தகவலை தெரிவித்துவிட்டு மத்திய குற்றப்பிரிவில் புகாரளித்தேன். விசாரணையில்தான் நாகராஜன் என்ற பெயரில் ஏமாற்றியவர், என்னை மட்டுமல்ல, மேலும் சிலரையும் ஏமாற்றியது தெரியவந்தது" என்றார்.

தொழிலதிபரிடம் முகநூலில் பழகி மோசடி! - அனுதாபம் மூலம் ரூ.1.1 கோடி பறித்த தாய், மகள்
சீமான்
சீமான்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், `` நாகராஜன் என்ற பெயரில் அரசியல் பிரமுகர்களை ஏமாற்றியவரின் உண்மையான பெயர் சிவக்குமார் என்கிற ஜேக்கப். இவர் புதுச்சேரியைச் சேர்ந்தவர். இவருக்குத் திருமணமாகி கைக்குழுந்தை ஒன்று உள்ளது. சிவக்குமார், சம்பாதித்த பணத்தை ஆன்லைன் விளையாட்டில் இழந்திருக்கிறார். அதனால்தான் குழந்தைக்கு உடல்நலம் சரியில்லை என்றுகூறி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் எம்பி விஜய்வசந்த், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களிடம் பணத்தை ஏமாற்றியிருக்கிறார். விசாரணைக்குப் பிறகு சிவக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறோம்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு