Published:Updated:

முதல்வர் வீடு அருகே நடந்த தீக்குளிப்பு; பின்னணி என்ன?

சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டின் அருகில் நடந்த தீக்குளிப்புச் சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை ஆழ்வார்பேட்டை, சித்தரஞ்சன் சாலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடு இருக்கிறது. முதல்வரின் வீடு என்பதால் அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருப்பது வழக்கம். இன்று முதல்வரின் வீட்டுக்கு அருகே வந்த ஒருவர், திடீரென மறைத்துவைத்திருந்த மண்ணெண்ணெயைத் தன்மீது ஊற்றினார். பின்னர் அவர் தீக்குளித்தார். அதைப் பார்த்த பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அந்த நபர் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

Vikatan
வெற்றிமாறன்
வெற்றிமாறன்
சென்னை: `உள்ளாட்சி தேர்தல் பகை?’ - வெட்டி கொல்லப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்

பின்னர் அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. முதற்கட்ட விசாரணையில் முதல்வரின் வீட்டின் அருகே தீக்குளித்தவரின் பெயர் வெற்றிமாறன் எனத் தெரியவந்துள்ளது. இவர் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தாலுகா, ஜமீன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் `பறையர் பேரவை' என்ற அமைப்பின் தலைவராக இருக்கிறார். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வெற்றிமாறன் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால், அவரின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதற்குச் சிலர்தான் காரணம் எனக் கருதிய வெற்றிமாறன், சென்னைக்கு வந்து முதல்வர் வீட்டின் அருகே தீக்குளித்தது தெரியவந்தது. சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தீக்குளித்தவரை மருத்துவமனைக்கு சென்று சந்தித்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு