Published:Updated:

மதுபோதையிலிருந்த மகனால் தாய்க்கு நேர்ந்த கொடூரம்! மகனைக் கைதுசெய்த போலீஸ்

கணவன் மனைவிக்கு இடையே நடந்த தகராறு காரணமாக மூர்த்தியை அவரின் மனைவி பிரிந்து சென்றுவிட்டார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை வேளச்சேரி, நேரு நகர், திரு.வி.க தெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவரின் மனைவி லட்சுமி (47). இவர்களின் மகன் மூர்த்தி. 19-ம் தேதி லட்சுமி வீட்டிலிருந்தபோது மது போதையில் மூர்த்தி வீட்டுக்கு வந்திருக்கிறார். அப்போது லட்சுமியிடம் பணம் கேட்டுத் தகராறு செய்திருக்கிறார். இதில் ஆத்திரமடைந்த மூர்த்தி, வீட்டிலிருந்த கத்தியை எடுத்து லட்சுமியை சரமாரியாக குத்தியிருக்கிறார். ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த லட்சுமி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சென்னை: மதுபோதையில் தந்தையைக் கொலை செய்த மகன்! - தாய் கொடுத்த புகாரில் கைது
லட்சுமி
லட்சுமி

இது குறித்து தகவலறிந்த வேளச்சேரி போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று லட்சுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இந்தக் கொலை வழக்கு தொடர்பாக லட்சுமியின் மகன் மூர்த்தியிடம் போலீஸார் விசாரணை நடத்தி, அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்த கத்தியையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

வேளச்சேரி போலீஸார் கூறுகையில், ``மூர்த்திக்கு திருமணமாகிவிட்டது. ஆனால் கடந்த ஓராண்டுக்கு முன் கணவன் மனைவிக்கு இடையே நடந்த தகராறு காரணமாக மூர்த்தியை அவரின் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். மதுப்பழக்கத்துக்கு அடிமையான மூர்த்தி சரிவர வேலைக்குச் செல்வதில்லை. மது குடிக்க தாயிடம் அடிக்கடி பணம் கேட்டுத் தொந்தரவு செய்திருக்கிறார். பணம் கொடுக்க மறுத்ததால் லட்சுமியை மூர்த்தியை கொலைசெய்திருக்கிறார்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு