Published:Updated:

சென்னை: `ஆடிட்டர் கடத்தப்பபட்ட வழக்கு்; ஆடிட்டரையும் சேர்த்து கைது செய்த போலீஸ்! நடந்தது என்ன?'

கடத்தல்
கடத்தல் ( Representation Image )

80 லட்சம் ரூபாய் கொடுத்தால் ராஜாவை உயிரோடு விடுவோம் என மிரட்டியது. அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ராஜாவின் டிரைவர் போலீஸ் நிலையத்தில் தகவலைத் தெரிவித்தார்.

சென்னை வடபழனியைச் சேர்ந்தவர் ஆடிட்டர் ராஜா. கடந்த 6-ஆம் தேதி இவர் தன்னுடைய காரில் எழும்பூருக்குச் சென்றார். காரை ராஜாவின் டிரைவர் ஓட்டிச் சென்றார். எழும்பூரில் உள்ள லாட்ஜில் தங்கியிருந்த ராஜாவை ஒரு கும்பல் கடத்திச் சென்றது. பிறகு ராஜாவின் டிரைவருக்கு போன் செய்த கும்பல், 80 லட்சம் ரூபாய் கொடுத்தால் ராஜாவை உயிரோடு விடுவோம் என மிரட்டியது. அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ராஜாவின் டிரைவர் போலீஸ் நிலையத்தில் தகவலைத் தெரிவித்தார்.

ஆடிட்டரைக் கடத்தும் கும்பல்
ஆடிட்டரைக் கடத்தும் கும்பல்

ராஜாவின் டிரைவரிடம் போனில் பேசிய செல்போன் நம்பரின் சிக்னலை போலீஸார் ஆய்வு செய்தனர். அதோடு ராஜா தங்கியிருந்த லாட்ஜில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது ராஜாவை கடத்திச் சென்ற வாகனத்தின் பதிவு நம்பரைக் கொண்டு கடத்தல் கும்பலை போலீஸார் தேடி வந்தனர்.

இந்தநிலையில் கடத்தல் கும்பல், ஆடிட்டரின் டிரைவருக்கு போன் செய்து பணத்தை ஏற்பாடு செய்து விட்டீர்களா எனக் கேட்டுள்ளனர். மறுமுனையில் போலீஸார் கடத்தல் கும்பலிடம் பேசினர். நீங்கள் சரண்டைந்துவிட்டால் நல்லது. இல்லையென்றால் நடவடிக்கை கடுமையாக இருக்கும் எனப் போலீஸார் தெரிவித்தனர். அதனால், ஆடிட்டர் ராஜாவை அழைத்துக்கொண்டு கடத்தல் கும்பல் காவல் நிலையத்துக்கு வந்தது. பின்னர், ஆடிட்டர் ராஜா அரசு அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி 80 லட்சம் ரூபாய் வரை ஏமாற்றிவிட்டதாகக் கடத்தல் கும்பல் ஒரு புகாரை அளித்தது.

கும்பகோணம்: வெளியே காய்கறி; உள்ளே மதுப்பாட்டில்... கடத்தல் கும்பலை வளைத்த  போலீஸ்!
கடத்தல் வழக்கில் கைதானவர்கள்
கடத்தல் வழக்கில் கைதானவர்கள்

இதையடுத்து போலீஸார் ஆடிட்டர் ராஜாவைக் கடத்திய குற்றச்சாட்டில் விருத்தாச்சலத்தைச் சேர்ந்த குமார், விழுப்புரத்தைச் சேர்ந்த அலெக்ஸ், பண்ட்ருட்டியைச் சேர்ந்த கிள்ளி வளவன், சுதர்சன், சிவபாலன், திருவண்ணாமலையைச் சேர்ந்த ராமமூர்த்தி ஆகிய 6 பேர்மீது ஆள்கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் பணம் வாங்கி மோசடி செய்த வழக்கில் ஆடிட்டர் ராஜா கைது செய்யப்பட்டார்.

அடுத்த கட்டுரைக்கு