Published:Updated:

குளியலறையில் ரகசிய வீடியோ; இளம்பெண் கொடுத்த புகார்; கைதான பக்கத்து வீட்டு இளைஞன்!

சென்னையில் இளம்பெண் ஒருவர் குளியலறையில் குளித்தபோது சத்தம் கேட்டுத் திரும்பவே செல்போனில் ஒருவர் வீடியோ எடுப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை மாங்காடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 22 வயதான இளம்பெண் ஒருவர் தனது வீட்டுக் குளியலறையில் குளித்துக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது குளியலறை `Exhauster fan' பகுதியிலிருந்து சத்தம் கேட்டிருக்கிறது. மின்விசிறியின் சத்தம் என இளம்பெண் முதலில் நினைத்திருக்கிறார். இந்தச் சமயத்தில் சத்தம் வந்த இடத்தை அவர் கூர்ந்து கவனித்தபோது மர்ம நபர் ஒருவர் வீடியோ எடுப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அந்தப் பெண் சத்தம் போட்டிருக்கிறார். இதையடுத்து செல்போனை எடுத்துக்கொண்டு மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார். பின்னர் நடந்த சம்பவத்தை இளம்பெண், குடும்பத்தினரிடம் தெரிவித்திருக்கிறார்.

கைது!
கைது!
குளியலறையில் பெண் தொழிலதிபர் கொலை - சிசிடிவியில் சிக்கிய 2 பேர்!

இந்தச் சம்வம் தொடர்பாக இளம்பெண், மாங்காடு காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். இளம்பெண் அளித்த தகவல் அடிப்படையிலும், போலீஸார் நடத்திய விசாரணை அடிப்படையிலும் உளுந்தூர்பேட்டை தாலுகாவைச் சேர்ந்த மணி அருள் (26) என்பவர் இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்தது தெரியவந்தது. இவர் இளம்பெண் குடியிருக்கும் வீட்டின் அருகில் தங்கியிருந்து, சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவருகிறார். இவரிடமிருந்து செல்போன் ஒன்றை போலீஸார் பறிமுதல் செய்து அதை ஆய்வு செய்துவருகின்றனர். தொடர்ந்து மணி அருளிடம் விசாரணை நடத்தப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, போலீஸார் சிறையில் அடைத்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு