Published:Updated:

சென்னை: கொசுவை விரட்ட வீட்டுக்குள் புகைமூட்டம்; மர்மமாக இறந்துபோன இருவர்; 2 பேர் கவலைக்கிடம்!

சடலம்
சடலம்

சென்னை பம்மலில் கொசுவை விரட்ட வீட்டுக்குள் புகைமூட்டைத்தை ஏற்படுத்தியதால் மூச்சுத்திணறி ஒருபெண்ணும் சிறுவனும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னையை அடுத்த பம்மல், திருவள்ளுவர் தெரு, பொன்னி நகரில் வசித்துவருபவர் புஷ்பலட்சுமி. இவர் நேற்று இரவு குடும்பத்தினருடன் தூங்கியிருக்கிறார். வீட்டுக்குள் கொசுக்களை விரட்ட அடுப்புக்கரி மூலம் புகைமூட்டத்தை ஏற்படுத்தியிருக்கின்றனர். பின்னர் வீட்டுக்குள் ஏசி-யையும் ஆன் செய்ததாகச் சொல்லப்படுகிறது. இந்தநிலையில், இன்று காலை நீண்ட நேரமாகியும் புஷ்பலட்சுமி வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. அதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப் பார்த்தனர்.

`காலாவதி பைகளால் கொசு உற்பத்தி'- ஜொமொட்டோவுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த சென்னை மாநகராட்சி!
சடலம்
சடலம்
Representational Image

அப்போது வீடு முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளித்தது. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்றபோது புஷ்பலட்சுமியும் அவரின் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரும் மயங்கியநிலையில் கிடந்தனர். அவர்களை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு புஷ்பலட்சமி உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மற்ற மூன்று பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், விஷால் என்ற சிறுவனும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இது குறித்து சங்கர்நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இது குறித்து போலீஸார் கூறுகையில், ``புஷ்பலட்சுமி, அவரின் குடும்பத்தைச் சேர்ந்த சொக்கலிங்கம், மல்லிகா, விஷால் ஆகியோர் வீட்டுக்குள் தூங்கியிருக்கின்றனர். கொசுக்களை விரட்ட ஏற்படுத்திய புகைமூட்டதால் மூச்சுத்திணறி புஷ்பலட்சுமி உயிரிழந்திருக்கிறார். சொக்கலிங்கம், மல்லிகா இருவரும் சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சை பலனின்றி சிறுவன் விஷால் உயிரிழந்தார். இருவரின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடந்துவருகிறது" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு