Published:Updated:

ஓய்வுபெறவிருந்த எஸ்.ஐ துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை; போலீஸ் விசாரணை!

போலீஸ் எஸ்.ஐ கௌதம்

சிறப்பு பாதுகாப்புப் படையிலிருந்த போலீஸ் கௌதம், துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

ஓய்வுபெறவிருந்த எஸ்.ஐ துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை; போலீஸ் விசாரணை!

சிறப்பு பாதுகாப்புப் படையிலிருந்த போலீஸ் கௌதம், துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

Published:Updated:
போலீஸ் எஸ்.ஐ கௌதம்

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் பகுதியைச் சேர்ந்தவர் கௌதம் (59). இவர் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றிவந்தார். இவருக்கு லலிதா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். 59 வயதாகும் கௌதம், விருப்ப ஓய்வில் செல்ல விரும்பினார். ஆனால், சில காரணங்களுக்காக அவருக்கு ஓய்வு பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டது. சில தினங்களுக்கு முன்பு பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதி அனில் குமார் உடல்நிலை குறைவால் குரோம்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரின் பாதுகாப்புப் பணியில் கௌதம் நியமிக்கப்பட்டிருந்தார்.

எஸ்.ஐ கௌதம்
எஸ்.ஐ கௌதம்

இரவு பணி முடித்துவிட்டு கௌதம், மேலக்கோட்டையூர் போலீஸ் குடியிருப்புக்கு வந்தார். பின்னர் பணிக்குச் செல்ல வேண்டும் என்று கூறிய கௌதம் ஓய்வெடுக்க அறைக்குள் சென்றார். இன்று காலை பணிக்குச் செல்வதற்குத் தயாராகிக்கொண்டிருந்தபோது மனைவியிடம் காபி கேட்டு அவரின் அறைக்கு கௌதம் சென்றார். அப்போது அறையிலிருந்து துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. அதனால் அதிர்ச்சியடைந்த அவரின் மனைவி அறைக்குள் சென்று பார்த்தார். அப்போது படுக்கையில் ரத்த வெள்ளத்தில் கெளதம் கிடந்தார். அவரருகில் துப்பாக்கி கிடந்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கௌதமின் மனைவி, அவரின் மகன்கள் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வந்தனர். கௌதம் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து தாழம்பூர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து கௌதமின் சடலம், அவரின் துப்பாக்கி ஆகியவற்றை எடுத்துச் சென்றனர். பிரேத பரிசோதனைக்காக கெளதமின் சடலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. சம்பவம் நடந்த இடத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் நேரில் சென்று விசாரணை செய்தார். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

எஸ்.ஐ கௌதம்
எஸ்.ஐ கௌதம்

கௌதம் தற்கொலை செய்துகொண்டது ஏன் என்று செங்கல்பட்டு மாவட்ட போலீஸாரிடம் கேட்டதற்கு, ``கெளதமின் மனைவி கொடுத்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகிறோம். கௌதம் ஓய்வு பெறவேண்டிய சூழலில்தான் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 என உயர்த்தப்பட்டது. அதனால் அவருக்கு இரண்டாண்டுகள் சர்வீஸ் கிடைத்தது. அதற்கு முன்பு ஓய்வு பெற கெளதம் திட்டமிட்டார். ஆனால் அவரின் குடும்பச் சூழல் காரணமாக வேலை செய்யவேண்டிய நிர்ப்பந்தம் கௌதமுக்கு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக கௌதமுக்கு அவரின் மகன் குறித்த கவலை காரணமாக மனதளவில் வேதனையில் இருந்தார். கடன்சுமையும் இருந்ததாகத் தெரிகிறது. இதனால்தான் அவர் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம்" என்றனர். துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சிறப்பு எஸ்.ஐ கெளதம், முன்னாள் கல்வி அமைச்சர் செங்கோட்டையனுக்குப் பாதுகாப்புப் பணியிலும் இருந்தவர்.