Published:Updated:

`காதலை அவள் ஏற்கவில்லை... அதனால்தான் ரயிலில் தள்ளிவிட்டேன்' - மாணவி கொலையில் இளைஞர் அதிர்ச்சி தகவல்

மாணவி கொலை செய்யப்பட்ட ரயில் நிலையம்

சென்னையில் ரயிலில் தள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட சோகத்தில் அவரின் தந்தையும் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார். இந்த நிலையில் மாணவி கொலை வழக்கில் கைதான இளைஞரும் அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்திருக்கிறார்.

`காதலை அவள் ஏற்கவில்லை... அதனால்தான் ரயிலில் தள்ளிவிட்டேன்' - மாணவி கொலையில் இளைஞர் அதிர்ச்சி தகவல்

சென்னையில் ரயிலில் தள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட சோகத்தில் அவரின் தந்தையும் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார். இந்த நிலையில் மாணவி கொலை வழக்கில் கைதான இளைஞரும் அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
மாணவி கொலை செய்யப்பட்ட ரயில் நிலையம்

சென்னையைச் சேர்ந்த மாணவி ஒருவர், தி.நகரிலுள்ள கல்லூரி ஒன்றில் படித்துவந்தார். கல்லூரிக்குச் செல்ல மாணவி, தோழிகளுடன் பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு நேற்று மதியம் (13.10.2022) வந்தார். ரயிலுக்காகக் காத்திருந்த மாணவியிடம் அவருக்குத் தெரிந்த இளைஞர் சதீஷ் என்பவர் பேசிக்கொண்டிருந்தார். அப்போது சென்னை கடற்கரையை நோக்கி ஒரு மின்சார ரயில் வந்துகொண்டிருந்தது. மாணவிக்கும் சதீஷுக்கும் இடையே திடீரென கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சதீஷ், மாணவியைத் தண்டவாளத்தில் தள்ளிவிட்டார். இதில் ரயில் மோதி மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மாணவியின் சடலம்
மாணவியின் சடலம்

இது குறித்து தி.நகர் ரயில்வே போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். மாணவியை ரயிலில் தள்ளிக் கொலைசெய்ததாக சதீஷ் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு அவரை போலீஸார் கைதுசெய்தனர். சதீஷிடம் விசாரணை நடந்துவருகிறது. இந்த நிலையில் மாணவியின் தந்தை, மகள் இறந்த துக்கம் தாங்க முடியாமல் மதுவில் விஷம் கலந்து நேற்றிரவு தற்கொலை செய்துகொண்டார். மாணவியின் தந்தை, மாரடைப்பு காரணமாக இறந்ததாக முதலில் தகவல் பரவியது. தற்போதுதான் அவர் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸார் தெரிவித்தனர். அடுத்தடுத்து மகள், அவளின் தந்தை என உயிரிழந்ததால் அவர்களின் குடும்பம் சோகத்தில் மூழ்கியது. இருவரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர். மாணவியின் தந்தை தற்கொலைச் சம்பவம் தொடர்பாக ஆதம்பாக்கம் போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

மாணவியின் கொலை, அவரின் தந்தை தற்கொலைச் சம்பவங்கள் குறித்து ரயில்வே போலீஸார், ஆதம்பாக்கம் போலீஸார் ஆகியோரிடம் விசாரித்தோம். ``பரங்கிமலை ரயில் நிலையத்திலிருந்த பயணிகள், தூய்மைப் பணியாளர்கள், மாணவியின் தோழிகள் ஆகியோர் அளித்த தகவலின்படி கொலை வழக்கு பதிவுசெய்திருக்கிறோம். இந்த வழக்கில் கைதான சதீஷிடம் விசாரித்தபோது அவர் என்ன நடந்தது என்பதை வாக்குமூலமாக அளித்திருக்கிறார். விசாரணைக்குப் பிறகு சதீஷ், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படவிருக்கிறார்” என்றனர்.

விசாரணையின்போது சதீஷ் என்ன கூறினார் என்று ரயில்வே போலீஸாரிடம் கேட்டதற்கு, ``உயிரிழந்த மாணவியைத் தனக்கு சிறுவயது முதலேயே நன்றாகத் தெரியும். இருவரும் ஒரே காவலர் குடியிருப்பில் குடியிருந்ததால் நட்பாகப் பழகிவந்தோம். எனக்கு விவரம் தெரிந்த பிறகு மாணவியைக் காதலித்தேன். அதனால் என்னுடைய குடும்பத்துக்கும், மாணவியின் குடும்பத்துக்குமிடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது. இந்தச் சமயத்தில் என்னுடைய தந்தை காவலர் பணியை விட்டுவிட்டு வேறு வேலைக்குச் சென்றார். அதனால் காவலர் குடியிருப்பிலுள்ள வீட்டை காலி செய்துவிட்டு அதற்குப் பக்கத்தில் குடியிருந்தோம். அப்போதும் மாணவியிடம் காதலை வெளிப்படுத்தினேன். அதை அவள், வீட்டில் சொல்லிவிட்டாள். அதனால், சில மாதங்களுக்கு முன்புகூட மாணவியின் பெற்றோர் என்மீதும், என் குடும்பத்தினர்மீதும் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

சதீஷ்
சதீஷ்

அதன்பேரில் போலீஸார் என்னிடமும் என் குடும்பத்தினரிடம் விசாரித்தனர். அப்போது மாணவிக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் எந்தவிதத் தொல்லையும் கொடுக்கக் கூடாது என்று என்னிடம் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பிவைத்தனர். ஆனால், மாணவியை என்னால் மறக்க முடியவில்லை. அதனால், அவளைப் பின்தொடர்ந்து செல்வேன். சம்பவத்தன்று பரங்கிமலை ரயில் நிலையத்தில்கூட மாணவியிடம் என் காதலைக் கூறினேன். ஆனால், அவள் என் காதலை ஏற்கவில்லை. அதனால்தான் அவளைத் தண்டவாளத்தில் தள்ளிவிட்டேன். அவள் இல்லாத உலகத்தில் எனக்கும் உயிர்வாழ ஆசையில்லை என்று கூறியிருக்கிறார். தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம்" என்றனர்.