Published:Updated:

கணவரைப் பிரிந்து வாழ்ந்த இளம்பெண்ணுடன் நட்பு; தனியார் நிறுவன ஊழியர் கைதான பின்னணி!

சென்னையில் கணவரைப் பிரிந்து வாழ்ந்த இளம்பெண்ணுடன் பழகிய தனியார் நிறுவன ஊழியரைப் போலீஸார் கைது செய்தனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னையைச் சேர்ந்தவர் ராணி (25) (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது)). இவருக்குத் திருமணமாகி 3 வயதில் ஒரு குழந்தை இருக்கிறார். ராணிக்கும் அவரின் கணவருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்தச் சூழலில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ராணிக்கு சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த நவீன்குமார் (23) என்பவர் அறிமுகமாகியிருக்கிறார்.

கைது!
கைது!
சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்! - 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்

ராணியின் திருமண வாழ்க்கை குறித்து அறிந்த நவீன்குமார், அவருக்கு ஆறுதல் கூறியிருக்கிறார். பிறகு ராணியைத் திருமணம் செய்து கொள்வதாகக்கூறி அவரோடு நெருங்கிப் பழகியிருக்கிறார். அதில் ராணி கர்ப்பமடைந்திருக்கிறார். இந்தத் தகவலை நவீன் குமாரிடம் ராணி கூறியதோடு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியிருக்கிறார். அதற்கு நவீன்குமார் மறுப்பு தெரிவித்ததோடு ராணிக்குக் கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்.

இதையடுத்து ராணி, துறைமுகம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நவீன்குமார் மீது புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் நவீன்குமாரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் நவீன்குமாரும் ராணியும் பழகியது தெரியவந்தது. ராணியைத் திருமணம் செய்ய மறுத்த குற்றச்சாட்டுக்காக நவீன்குமாரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைது!
கைது!

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``நவீன்குமார், தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருகிறார். அப்போது அவருக்கு கணவரைப் பிரிந்து குழந்தையோடு வாழ்ந்து வந்த ராணி என்பவர் அறிமுகமாகியிருக்கிறார். ராணியைத் திருமணம் செய்து கொள்வதாகக்கூறி நவீன்குமார் அவரை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அதில் ராணி கர்ப்பமடைந்திருக்கிறார். இந்தத் தகவலை நவீன்குமாரிடம் ராணி கூறியதும் கர்ப்பத்தை கலைக்கும்படி கூறியதோடு அவரைத் திருமணம் செய்து கொள்ளவும் மறுத்திருக்கிறார். அதனால் ராணி, புகாரளித்தார். அதன்பேரில் நவீன்குமாரிடம் விசாரித்தபோது அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். இதையடுத்து நவீன்குமாரை கைது செய்திருக்கிறோம்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு