Published:Updated:

16 வயது சிறுமி கர்ப்பம்; போக்சோவில் கைதான இளைஞர்!

சிறுமி கர்ப்பம்
சிறுமி கர்ப்பம்

சிறுமியின் அம்மா எம்.கே.பி.நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மோகன்ராஜிடம் விசாரித்தனர்.

சென்னை, புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் குடியிருக்கும் 16 வயது சிறுமி ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவருடைய பெற்றோர், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. அதனால் சிறுமியின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் சிறுமியிடம் விசாரித்தபோது, வியாசர்பாடி, சர்மாநகரைச் சேர்ந்த மோகன்ராஜ் (31) என்பவரின் பெயரை அதற்குக் காரணமாகக் கூறினார்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை
Representational Image

இதையடுத்து சிறுமியின் அம்மா எம்.கே.பி.நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மோகன்ராஜிடம் விசாரித்தனர். அப்போது அவர், சிறுமியைக் காதலித்ததாகவும், திருமண ஆசைகாட்டி பாலியல் வன்கொடுமை செய்ததையும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து மோகன்ராஜை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``கைதான மோகன்ராஜ், எம்.பி.ஏ பட்டதாரி. சென்னை துறைமுகத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்துவருகிறார். சிறுமியின் வீட்டுக்கு அடிக்கடிச் செல்லும் மோகன்ராஜ், அவரைக் காதலிப்பதாகக் கூறி நெருங்கிப் பழக ஆரம்பித்திருக்கிறார். சிறுமிக்கு ஏற்பட்ட திடீர் வயிற்றுவலி காரணமாக அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்திருக்கிறது" என்றனர்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை
representational image
சென்னை: குளிர்பானத்தில் மது; பெற்ற மகளுக்குப் பாலியல் தொல்லை! - தந்தை, சித்தி கைது

கொரோனா ஊரடங்கில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவருகின்றன. குறிப்பாக பாலியல் தொல்லை தொடர்பாக ஏராளமான வழக்குகள் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படுகின்றன. எனவே, குழந்தைகளுக்குப் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு