Published:Updated:

மாயமான பட்டதாரி இளைஞர்; கரை ஒதுங்கிய சடலம்; கொலையில் முடிந்த நட்பு!

கொலைசெய்யப்பட்ட மகேஷ்வரன்
கொலைசெய்யப்பட்ட மகேஷ்வரன்

சென்னையில் மாயமான பட்டதாரி இளைஞர், கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரைக் கொலைச் செய்ததாகக் கூறி நீதிமன்றத்துக்கு வந்த நண்பன் சரணடைந்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை ஆர்.ஏ.புரம், எஸ்.கே.பி.புரம், 1-வது தெரு, அறிஞர் அண்ணாநகரைச் சேர்ந்தவர் பஞ்சவர்ணம். இவர், பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் கடந்த 5-ம் தேதி புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், ``எனக்கு மூன்று குழந்தைகள். என் மூத்த மகன் கேரளாவில் வேலை செய்துவருகிறான். என் கணவர் சொந்த கிராமத்தில் விவசாயம் செய்துவருகிறார். நானும் மகனும் மகளும் சென்னையில் குடியிருந்துவருகிறோம்.

மாயம்
மாயம்
Representational Image

என் மகன் மகேஷ்வரன், 4-ம் தேதி இரவு 9:30 மணியளவில் சாப்பிட்டுவிட்டு, தூங்குவதற்காகத் தன்னுடைய அறைக்குச் சென்றான். அதன் பிறகு அவனைக் காணவில்லை அவனின் செல்போன் நம்பர் `ஸ்விட்ச் ஆஃப்' செய்யப்பட்டிருக்கிறது. மகேஷ்வரன், பிசிஏ படித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருந்தான். அவனைக் கண்டுபிடித்துத் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். இது குறித்து சப் இன்ஸ்பெக்டர் ரவிசங்கர் வழக்கு பதிவு செய்து விசாரித்துவந்தார்.

கடந்த 7-ம் தேதி காலையில் பட்டினப்பாக்கம் துலுக்கானத்தம்மன் கோயில் எதிரிலுள்ள கடற்கரைப் பகுதியில் நடைப்பயிற்சியில் பொதுமக்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அவர்களில் சிலர் விநாயகர் சிலை கரைக்கும் கடற்கரையோரம் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞரின் சடலம் கரை ஒதுங்கியிருப்பதைப் பார்த்தனர். உடனடியாக சீனிவாசபுரம் ஊர் பஞ்சாயத்துத் தலைவர் சேகருக்குப் பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சேகர், பட்டினப்பாக்கம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தார்.

சென்னை: திமுக பிரமுகர் கொலை! -போலீஸ் இன்ஃபார்மருக்குக் காவல் நிலையம் அருகிலேயே ஸ்கெட்ச்
கரை ஒதுங்கிய சடலம்
கரை ஒதுங்கிய சடலம்

பின்னர் சேகர் அளித்த புகாரில் ``இறந்து கிடந்தவர் யாரென்று தெரியவில்லை. அவரது வலது கையில் மணிக்கட்டுக்கு மேல் மூன்று அல்லது நான்கு வெட்டுக் காயங்கள் உள்ளன. தலையில் முடி இல்லை. தலையின் மேல் பகுதி, பின்பகுதியில் வெட்டுக் காயங்கள் உள்ளன. குறுந்தாடி வைத்திருந்தார். அவரின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது" என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யாரென்று விசாரித்தார். விசாரணையில் இறந்தது அபிராமபுரம் காவல் நிலையத்தில் மகனைக் காணவில்லை என்று புகாரளித்த பஞ்சவர்ணத்தின் மகன் மகேஷ்வரன் எனத் தெரியவந்தது. அதனால் இந்த வழக்கு அபிராமபுரம் காவல் நிலையத்திலிருந்து பட்டினப்பாக்கம் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதையடுத்து மகேஷ்வரனின் சடலத்தை மீட்ட பட்டினப்பாக்கம் போலீஸார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தச் சமயத்தில் சைதாப்பேட்டை நீதிமன்றத்துக்கு வந்த கார்த்திக் (25) என்பவர், ``பட்டினப்பாக்கம் கடற்கரையில் நானும் என்னுடைய நண்பர் மகேஷ்வரனும் மது அருந்தினோம். அப்போது எங்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மகேஷ்வரனைக் கொலை செய்து கடலில் தள்ளிவிட்டுவிட்டேன்" என்று கூறினார். அதனால் கார்த்திக் குறித்த தகவல் பட்டினப்பாக்கம் போலீஸாருக்குத் தெரிவிக்கப்பட்டது. பட்டினப்பாக்கம் போலீஸார் நீதிமன்றத்துக்கு வருவதற்கு முன், கார்த்திக் மாயமாகிவிட்டார். அதனால் கார்த்திக்கை போலீஸார் தேடினர்.

கார்த்திக்
கார்த்திக்

நீதிமன்றத்தில் கார்த்திக் அளித்த தகவல், விவரங்கள் அடிப்படையில் அவரை போலீஸார் கண்டுபிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்துவருகின்றனர். அப்போது போதையில் தான் மகேஷ்வரனைக் கொலை செய்துவிட்டதாக கார்த்திக் கூறியதாக போலீஸார் தெரிவித்தனர். இருப்பினும் மகேஷ்வரன் கொலைக்கான முழுக் காரணம் தெரியவில்லை. அது தொடர்பாக விசாரணை நடந்துவருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு