Published:Updated:

மயிலாடுதுறை: `மதுவுக்கு அடிமையான தாய்’ - 14 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

சீரழிக்கப்பட்ட சிறுமி
சீரழிக்கப்பட்ட சிறுமி

கிராம மக்களின் கடுமையான எதிர்ப்பால் வரதம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார், மணல்மேடு கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், கடலங்குடி கிராமத்தைச் சேர்ந்த ராஜ் ஆகியோரை மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நிலைய போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 14 வயதுச் சிறுமிக்கு குழந்தை பிறந்ததால், சந்தேகத்தின் பேரில் மருத்துவர்கள் நாகை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மைய சமூகப் பணியாளர் ஆரோக்கியராஜிடம் தெரிவித்தனர். ஆரோக்கியராஜ் வந்து விசாரித்தபோதுதான் அந்தச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதும் அதற்கு மதுபோதைக்கு அடிமையான தாயும் உடந்தை எனத் தெரியவந்தது.

police stataion
police stataion

இதுகுறித்து சமூகப் பணியாளர் ஆரோக்கியராஜ், மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார், சிறுமியிடமும் புகாரைப் பெற்ற போலீஸார் சிறுமியின் அக்காள் கணவர் தினேஷ், சிலர்மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்ததுடன் சிறுமியின் தாயார் மீது குழந்தைத் திருமணத் தடை சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் மயிலாடுதுறை அருகே உள்ள ஒரு கிராம மக்கள் ஒன்றுகூடி போலீஸார் முறையாக விசாரணை மேற்கொள்ளவிலலை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

அந்தக் கிராமத்தினர் சிலரிடம் பேசினோம். "சிறுமி தொடர் பாலியல் வன்முறை வழக்கில் காவல்துறையினர் முறையாக விசாரிக்கவில்லை. சில குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்கு சிறுமியின் அக்காள் கணவர் மீது மட்டும் பொய் வழக்கு போட்டுள்ளனர். சிறுமியின் தந்தை கடந்த 4 வருடங்களுக்கு முன் மனைவியின் நடத்தை சரியில்லாதால் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

தூய்மைப் பணியாளரான சிறுமியின் தாயார் மதுவுக்கு அடிமை. பணத்துக்கு ஆசைப்பட்டு மகளைத் தவறான வழிக்குத் தள்ளியுள்ளார். இதற்கிடையே மகள் கர்ப்பமானதால் திருமணம் ஆன பெண்போல் காட்ட தாலியைக் கட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பொய்க்கூறி பிரவசத்துக்கு சேர்த்திருக்கிறார்.

பலரால் பாலியல் தொல்லைக்கு ஆளானதை மூடி மறைக்க சிறுமியின் அக்காள் கணவர் தினேஷை பண ஆசை காட்டி சிக்க வைத்துள்ளனர். உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க சிறுமியின் தாயாரது செல்போனில் தொடர்புகொண்டவர்களை விசாரணை செய்ய வேண்டும், தினேஷுக்கு டி.என்.ஏ பரிசோதனை செய்ய வேண்டும். அதன் பிறகுதான் உண்மை வெளிவரும். உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும்" என்றனர்.

police stataion
police stataion

கிராம மக்களின் கடுமையான எதிர்ப்பால் வரதம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார், மணல்மேடு கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், கடலங்குடி கிராமத்தைச் சேர்ந்த ராஜ் ஆகியோரை மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நிலைய போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர். பணம் அதிகம் விளையாடியதாகவும், முக்கிய புள்ளிகள் சிலர் தப்பியுள்ளதாகவும் கிராமத்தினர் கூறுகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு