Published:Updated:

சென்னை: சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு! - இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

13 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

சென்னை, அண்ணாநகர் காவல் மாவட்டத்தில் 13 வயது சிறுமி பெற்றோருடன் வசித்துவந்தார். சிறுமி குடியிருக்கும் பகுதியில் வசித்தவர் ரூபன் (22). ஒரே பகுதி என்பதால் சிறுமியுடன் ரூபன் பழகிவந்திருக்கிறார். இந்தச் சூழலில் 2018-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் சிறுமி வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். அப்போது அங்கு சென்ற ரூபன், சிறுமியிடம் ஆசைவார்த்தைகளைக் கூறி அவரைப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

போக்சோ வழக்குகள்
போக்சோ வழக்குகள்

இது குறித்து சிறுமி, தன்னுடைய அம்மாவிடம் கூறிக் கதறி அழுதிருக்கிறார். தகவலைக் கேள்விப்பட்ட சிறுமியின் அம்மா, வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். சிறுமி அளித்த தகவலின்படி ரூபனை 18.10.2018-ம் அன்று கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திலுள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணை முடிந்து 9.11.2021-ம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் குற்றவாளி ரூபனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 25,000 ரூபாயும் அபராதமும் விதிக்கப்பட்டன. அபராதத் தொகையை கட்டத் தவறினால் மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

`10 வயது சிறுமிக்கு 51 வயது நபரால் நேர்ந்த கொடுமை!' - ஒரே நாளில் பதிவான இரு போக்சோ வழக்குகள்!
தண்டனை
தண்டனை
மாதிரி புகைப்படம்

இந்த வழக்கை சிறப்பாகப் புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி, குற்றவாளிக்கு தண்டனை வாங்கிக் கொடுத்த போலீஸாரை கமிஷனர் சங்கர் ஜிவால் பாராட்டியிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு