Published:Updated:

சென்னை: 2 நாள்களாகக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை! - நேபாளச் சிறுமியின் வாக்குமூலத்தால் சிக்கிய 3 பேர்

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை ( Representational Image )

சென்னையில் நேபாளத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை அறையில் அடைத்துவைத்து, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக மூன்று பேரைக் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

சென்னையிலுள்ள வங்கியில் காவலாளியாக நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர் 30 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றிவருகிறார். இவர், சென்னையில் குடும்பத்தோடு தங்கியிருக்கிறார். இவரின் இரண்டாவது மகளுக்கு 15 வயதாகிறது. சென்னையிலுள்ள பங்களா வீட்டில் வேலை செய்துவரும் சிறுமி, தினமும் இரவில் வீட்டுக்குச் சென்றுவிடுவாள். இந்தநிலையில், கடந்த 18-ம் தேதி வேலை முடிந்து சிறுமிக்கு வீட்டு வரவில்லை. அதனால் சிறுமியின் தந்தை மகளைப் பல இடங்களில் தேடினார். ஆனால் அவள் கிடைக்கவில்லை. இதையடுத்து மகளைக் காணவில்லை என கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் சிறுமியைத் தேடிவந்தனர்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
Representational Image

இந்தநிலையில் இரண்டு நாள்கள் கழித்து சிறுமி வீடு வந்து சேர்ந்தாள். அவளிடம் எங்கு சென்றாய் என்று குடும்பத்தினர் விசாரித்தனர். அப்போது, கே.கே.நகரிலுள்ள புருஷோத்தம்மன் அங்கிள் வீட்டுக்குச் சென்றபோது அவர் உட்பட மூன்று பேர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாகவும், இரண்டு நாள்கள் வீட்டிலேயே அடைத்துவைத்திருந்ததாகவும் கண்ணீர்மல்கக் கூறினாள். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை, கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தார். இதையடுத்து கீழ்ப்பாக்கம் போலீஸார் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலுக்குத் தகவல் தெரிவித்தனர். அவரின் உத்தரவின்பேரில் கூடுதல் கமிஷனர் கண்ணன், துணை கமிஷனர் கார்த்திக்கேயன், உதவி கமிஷனர் ரமேஷ் ஆகியோர் மேற்பார்வையில் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸார் சிறுமியிடம் விசாரித்தனர்.

போலீஸாரிடம் சிறுமி கூறிய தகவலின்படி கே.கே.நகரைச் சேர்ந்த புருஷோத்தம்மன் (43) என்பவரை முதலில் பிடித்தனர். பிறகு அவர் அளித்த தகவலின்படி சென்னை தேனாம்பேட்டை நக்கீரன் நகரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் விக்கி என்கிற விக்னேஷ் (23), ஆயிரம் விளக்குப் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (24) ஆகியோரை போலீஸார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் மூன்று பேரும் சேர்ந்து சிறுமியைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து போலீஸார் சிறையில் அடைத்தனர்.

சென்னை:காதல் வலை; நம்பிச் சென்ற சிறுமி-கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய காதலன், நண்பர்கள்
பாலியல்  தொல்லை
பாலியல் தொல்லை
மாதிரி படம்

இது குறித்து கீழ்ப்பாக்கம் போலீஸார் கூறுகையில், ``சிறுமியின் அப்பாவும் புருஷோத்தமனும் வங்கியில் காவலாளிகளாக பணியாற்றிவருகின்றனர். அதனால் சிறுமிக்கு புருஷோத்தமன் ஏற்கெனவே அறிமுகமாகியிருக்கிறார். சம்பவத்தன்று சிறுமி தனக்குத் தெரிந்த ஒருவரைச் சந்திக்க கே.கே.நகர் பகுதிக்குச் சென்றிருக்கிறார். அப்போது புருஷோத்தமனைச் சந்தித்திருக்கிறார். இதையடுத்து புருஷோத்தமன் வீட்டிலேயே சிறுமி இரவு தங்கியிருக்கிறார். அப்போது சிறுமியை புருஷோத்தமன் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அதன் பிறகு புருஷோத்தமனுக்குத் தெரிந்த அருண்குமாரும் விக்னேஷும் கே.கே.நகருக்கு வந்திருக்கின்றனர். அவர்கள் இருவரும் சிறுமியை மிரட்டிப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர்.

10-ம் வகுப்பு படிக்கும் மகளின் தோழிக்குப் பாலியல் தொல்லை! - தஞ்சை அதிமுக பிரமுகர் கைது

இரண்டு நாள்கள் புருஷோத்தமன் வீட்டில் சிறுமியை அடைத்து வைத்த பிறகு மூன்றாவது நாள் அவளை மூன்று பேரும் வெளியில் அனுப்பியிருக்கின்றனர். அப்போது சிறுமியிடம் `உன்னுடைய அந்தரங்கப் புகைப்படங்கள், வீடியோக்கள் எங்களின் செல்போன்களில் உள்ளன. எனவே, இங்கு நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் அதைச் சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவோம். அதோடு உன்னையும் உன் குடும்பத்தினரையும் கொலை செய்துவிடுவோம்’ என மிரட்டியிருக்கின்றனர். அதற்கு பயந்துபோன சிறுமி, எதுவும் நடக்காததுபோல வீட்டுக்கு வந்திருக்கிறார். ஆனால், சிறுமியின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்ததால், அவளிடம் விசாரித்தபோது தனக்கு நடந்த கொடுமைகளைக் கூறியிருக்கிறார். சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மூன்று பேரையும் கைதுசெய்திருக்கிறோம். சிறுமிக்கு கவுன்சலிங் அளிக்கப்பட்டதோடு மருத்துவப் பரிசோதனையும் செய்யப்பட்டிருக்கிறது" என்றனர்.

சிறுமிக்குப் பாலியல் தொல்லை!
சிறுமிக்குப் பாலியல் தொல்லை!

போக்சோ வழக்கில் கைதானவர்கள் போலீஸாரிடம் பல்வேறு தகவல்களைத் தெரிவித்திருக்கிறார்கள். இது குறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் நம்மிடம், ``சம்பவத்தன்று புருஷோத்தமன் வீட்டில் யாருமில்லை. அதனால் சிறுமி அவரின் வீட்டில் தங்கியபோது புருஷோத்தமன் தவறாக நடந்திருக்கிறார். அதை வெளியில் சொல்லாமலிருக்க சிறுமியை புருஷோத்தமன் மிரட்டியிருக்கிறார். அதன் பிறகுதான் புருஷோத்தமனுக்குத் தெரிந்த விக்னேஷ், அருண்குமார் ஆகியோர் வந்திருக்கின்றனர். அவர்களும் மிரட்டியே சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். சிறுமி, மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பதால் அவளிடம் விரிவாக விசாரணை நடத்த முடியவில்லை. கவுன்சலிங் அளித்த பிறகு சிறுமியிடம் விசாரணை நடத்தவிருக்கிறோம்" என்றார்.

சென்னையில் ஏற்கெனவே மாற்றுத்திறனாளியான சிறுமி ஒருவரைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது. அதைப்போல இன்னொரு சம்பவம் நடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு