Published:Updated:

`ஒரு வயது குழந்தையைக் கொடூரமாகக் கொன்ற பாட்டி'- கைது செய்த போலீஸ்

கோவை லாலிரோடு அருகே ஒரு வயதுக் குழந்தையைக் கொன்ற பாட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கோவை லாலிரோடு பகுதியைச் சேர்ந்தவர் நந்தினி. இவரின் கணவர் பெயர் நித்யானந்தம். இந்தத் தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இதனிடையே கணவன் மனைவிக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு இருவரும் பிரிந்துள்ளனர். முதல் குழந்தை சாய் கிருஷ்ணா (4வயது) நித்யானந்தத்திடமும், இரண்டாவது குழந்தை துர்கேஷ் (1 வயது) நந்தினியின் பராமரிப்பில் இருந்தனர்.

கோவை
கோவை
நீட் தேர்வு: `நீங்கள் எதிர்பார்த்ததைக் கொடுக்க முடியலை' - உருக்கமான கடிதம் எழுதி மாயமான கோவை மாணவன்

நந்தினியின் தாய் நாகலட்சுமி அருகில் உள்ள ஹோட்டலில் வேலை செய்து வந்துள்ளார். ஆனால், உடல்நிலை (52) சரியில்லாத காரணத்துக்காக அவரை வீட்டில் இருக்க சொல்லிவிட்டு நந்தினி வேலைக்கு சென்றுள்ளார்.

இதனால் நாகலட்சுமி தான் குழந்தையை பராமரித்து வந்துள்ளார். கடந்த 21-ம் தேதி நந்தினி பணிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, குழந்தை துர்கேஷ் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். ‘குழந்தை எப்போது தூங்கினான்’ போன்ற விபரங்களை தாயிடம் விசாரித்துள்ளார். அப்போது,’ நான் குப்பை கொட்ட சென்றபோது பால் குடித்தபடியே குழந்தை தூங்கிவிட்டான்.

தொட்டில்
தொட்டில்
கோப்புப் படம்

அதனால் தொட்டிலில் படுக்க வைத்தேன்’ என்று நாகலட்சுமி கூறியுள்ளார். சிறிது நேரம் கழித்து நந்தினி தொட்டிலில் பார்த்தபோது குழந்தையின் வாயில் நுரை தள்ளியிருந்தது. மயக்க நிலையில் இருந்த குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால், குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். இதுகுறித்து, நந்தினி ஆர்.எஸ்.புரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். குழந்தையின் உடலில் ஆங்காங்கே காயம் இருந்ததால் போலீஸார் சந்தேகமடைந்தனர். விசாரணையில் குழந்தையை பாட்டி நாகலட்சுமி அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது.

ஆர்.எஸ்.புரம் காவல்நிலையம்
ஆர்.எஸ்.புரம் காவல்நிலையம்

குழந்தை துர்கேஷ் வீட்டில் உள்ள பொருள்களை வாயில் எடுத்து கடிப்பதை பழக்கமாக வைத்துள்ளார். அன்றைய தினம் காலண்டர் பேப்பர் உள்ளிட்ட சில பொருள்களை குழந்தை வாயில் வைத்துள்ளது. இதனால், ஆத்திரமடைந்த நாகலட்சுமி குழந்தையைக் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

தொடர்ந்து குழந்தை பிஸ்கெட் பேப்பரை வாயில் வைத்துள்ளது. கோபமடைந்த நாகலட்சுமி, குழந்தையைக் கொன்றுள்ளார்.

நாகலட்சுமி
நாகலட்சுமி

போலீஸ் விசாரணையில், நாகலட்சுமிக்கு மகள் நந்தினியின் திருமணத்தில் விருப்பம் இல்லை என்று தெரியவந்துள்ளது. மருமகன் நித்யானந்தத்தை அவருக்கு சுத்தமாக பிடிக்காது என்றும் கூறியுள்ளார்.

மேலும், 2-வது குழந்தை பிறந்த நேரம் தான் கணவன் மனைவியை பிரித்துவிட்டது என்று துர்கேஷ் மீதும் வெறுப்பாக இருந்துள்ளார்.இதையடுத்து, குழந்தையை கொலை செய்த நாகலட்சுமியை போலீஸார் கைது செய்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு