Published:Updated:

``எனக்கு ரொம்பநாள் வாழணும்னு ஆசை, ஆனால்...” - பதறவைக்கும் கடலூர் கல்லூரி மாணவியின் தற்கொலைக் கடிதம்

மாணவியின் தற்கொலைக் கடிதம்

குளிப்பதை வீடியோ எடுத்து தன்னை ஒருவர் மிரட்டுவதாகக் கடிதம் எழுதிவைத்துவிட்டு கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

``எனக்கு ரொம்பநாள் வாழணும்னு ஆசை, ஆனால்...” - பதறவைக்கும் கடலூர் கல்லூரி மாணவியின் தற்கொலைக் கடிதம்

குளிப்பதை வீடியோ எடுத்து தன்னை ஒருவர் மிரட்டுவதாகக் கடிதம் எழுதிவைத்துவிட்டு கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
மாணவியின் தற்கொலைக் கடிதம்

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தை அடுத்திருக்கும் தெற்கு பிச்சாவரம் பகுதியைச் சேர்ந்தவர் மணிவண்ணன். அவரின் மகள் அஞ்சலை தேவி (இருவரின் பெயர்களும் மாற்றப்பட்டிருக்கின்றன). பத்து வருடங்களுக்கு முன்பு விபத்து ஒன்றில் மணிவண்ணன் இறந்துவிட, மகள் அஞ்சலை தேவியை தனியாகவே வளர்த்திருக்கிறார் அவரின் மனைவி.

தற்கொலை
தற்கொலை

அதே பகுதியில் ப்ளஸ் டூ படிப்பை முடித்த அஞ்சலை தேவி, சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் எம்.எஸ்.சி முதலாம் ஆண்டு படித்துவருகிறார். மேலும் சிங்கப்பூரில் தங்கி வேலை செய்யும் நரியன்குளத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அஞ்சலை தேவியை திருமணம் செய்துவைப்பதற்காக அவரின் உறவினர்கள் முடிவு செய்திருந்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு வீட்டின் பின்பக்கம் சென்றிருக்கிறார் அஞ்சலை தேவி. நீண்டநேரமாகியும் மகளைக் காணாததால் பின்பக்கம் சென்றிருக்கிறார் அவரின் தாய். அப்போது அங்கிருந்த கொட்டகையில் தூக்குப் போட்டுக்கொண்டு சடலமாகத் தொங்கிய மகளைப் பார்த்து கதறியழுதிருக்கிறார். அவரின் கூச்சல் கேட்டு அங்கு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் அஞ்சலை தேவியின் சடலத்தை மீட்டதுடன், காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் அஞ்சலை தேவியின் உடலை சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

கடலூர் மாவட்ட எஸ்.பி சக்தி கணேசன்
கடலூர் மாவட்ட எஸ்.பி சக்தி கணேசன்

அப்போது அஞ்சலை தேவி தற்கொலை செய்துகொண்ட இடத்தில் இருந்த தற்கொலைக் கடிதத்தையும் மீட்டனர். மாணவி அஞ்சலை தேவி எழுதியதாகக் கூறப்படும் அந்தக் கடிதத்தில், ``என்னை மன்னிச்சிடு அம்மா. எனக்கு வேற வழி தெரியலை. ஒருத்தன் நான் குளிக்கறதை வீடியோ எடுத்து என்னை பிளாக்மெயில் பண்றான். அவன்கிட்ட இருந்து தப்பிக்க எனக்கு வேற வழி தெரியலை. என்னை மன்னிச்சிடு.

தம்பியை நல்லா பார்த்துக்கோ. எனக்கு ரொம்பநாள் வாழணும்னு ஆசைதான். ஆனால் என்ன பண்ண... கடவுள் என்னை வாழ விடலை. எனக்கும் வேற வழி இல்லை” என்று எழுதப்பட்டிருக்கிறது.

``எனக்கு ரொம்பநாள் வாழணும்னு ஆசை, ஆனால்...” - பதறவைக்கும் கடலூர் கல்லூரி மாணவியின் தற்கொலைக் கடிதம்

இந்தச் சம்பவம் தொடர்பாக கடலூர் மாவட்ட எஸ்.பி சக்திகணேசனை நாம் தொடர்புகொண்டபோது, “இன்று அதிகாலை அந்த மாணவி வீட்டின் பின்னால் இருக்கும் கொட்டகையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். தான் குளிப்பதை வீடியோ எடுத்து ஒருவர் மிரட்டுவதால் தற்கொலை செய்துகொண்டதாக தற்கொலைக் கடிதம் எழுதிவைத்திருக்கிறார். ஆனால் யார் மிரட்டுகிறார்கள் என்பது குறித்து அந்தக் கடிதத்தில் எதுவும் குறிப்பிடவில்லை. அந்தக் கடிதத்தையும், அவர் பயன்படுத்திவந்த செல்போனையும் கைப்பற்றி விசாரணை செய்துவருகிறோம்” என்றார்.