Published:Updated:

​திண்டுக்கல்​: பள்ளி​ மாணவிகள் 4 பேர் திடீர் மாயம்; நள்ளிரவில் மீட்ட போலீஸார் - நடந்தது என்ன?!

பள்ளி வளாகத்தில் பெற்றோர்கள்

பள்ளி மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளி முன் திரண்டு முற்றுகையிட்டதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் மாணவிகளை விரைவில் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தைத் தொடர்ந்து பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.

​திண்டுக்கல்​: பள்ளி​ மாணவிகள் 4 பேர் திடீர் மாயம்; நள்ளிரவில் மீட்ட போலீஸார் - நடந்தது என்ன?!

பள்ளி மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளி முன் திரண்டு முற்றுகையிட்டதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் மாணவிகளை விரைவில் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தைத் தொடர்ந்து பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.

Published:Updated:
பள்ளி வளாகத்தில் பெற்றோர்கள்

​திண்டுக்கல் அரசு மருத்துவமனை அருகே அரசு உதவி பெறும் புனித செசிலியா​ல் பெண்கள் நடுநிலைப் பள்ளி இருக்கிறது. இங்கு ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்துவருகின்றனர். திண்டுக்கல், நந்தவனப்பட்டி, சீலப்பாடி, சென்னம்மாநாயக்கன்பட்டி, முருக பவனம், பேகம்பூர் உள்ளிட்ட திண்டுக்கல் நகரின் 5 கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்திலுள்ள மாணவிகள் படித்துவருகின்றனர். ​இவர்கள் ஆட்டோக்கள், பேருந்துகளில் பள்ளிக்கு வந்து செல்வது வழக்கம்.​

பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்
பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்

​இந்த நிலையில் நேற்று காலை பள்ளிக்கு வந்த ​8-ம் வகுப்பு மாணவிகள்​ நான்கு பேர்​ மாலை வீடு திரும்பவில்லை. நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளியை முறையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

தொடர்ந்து, திண்டுக்கல் ​செல்லாண்டியம்மன் கோயில் தெரு, நந்தவனப்பட்டி, சென்னம்மா நாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ​மாணவிகளின் பெற்றோர்கள் போலீஸாரிடம் புகார் அளித்தனர். பள்ளிக்கு வந்த திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து பள்ளி வளாகத்திலுள்ள ​கண்காணிப்பு ​கேமரா பதிவுகளைக்கொண்டு போலீ​ஸா​ர் விசாரணை நடத்திவருகின்றனர்.

மாணவிகளின் பெற்றோர்கள்
மாணவிகளின் பெற்றோர்கள்

இருப்பினும், பள்ளி மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளிக்கு முன்னால் திரண்டு முற்றுகையிட்டால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் மாணவிகளை விரைவில் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தைத் தொடர்ந்து பெற்றோர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். ​முதற்கட்ட விசாரணையில், மாணவிகளில் ஒருவருக்குப் பிறந்தநாள் கொண்டாட வெளியே சென்றிருப்பதாகத் தகவல் வெளியானது. அதை தொடர்ந்து விசாரணையை போலீஸார் தீவிரப்படுத்தினர்.

பின்னர், மாயமான மாணவிகள் நள்ளிரவு 12 மணிக்கு கரூர் பேருந்து நிலையத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதனிடம் கேட்டோம். ``குழந்தைகள் மாயமானது தொடர்பான புகாரைப் பெற்றவுடன் அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் அனுப்பியிருந்தோம். பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் விசாரித்தோம். இந்நிலையில் இரவு கரூர் பேருந்து நிலையத்தில் நான்கு மாணவிகள் நின்றுகொண்டிருப்பதாக கரூர் போலீஸார் எங்களுக்குத் தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில் நாங்கள் கரூர் பேருந்து நிலையத்துக்குச் சென்று, மாணவிகளை பத்திரமாக மீட்டு வந்தோம். மாணவிகளிடம் விசாரித்தபோது படிப்பில் நாட்டம் இல்லாமல், பள்ளிக்குச் செல்ல விரும்பாமல் வெளியேறியதாகக் கூறியுள்ளனர். மேற்கொண்டு பள்ளி நிர்வாகத்திடமும் பெற்றோர்களிடமும் விசாரிக்கவிருக்கிறோம்” என்றார்.