Published:Updated:

தண்ணீர்ப் பந்தல், சுவர் விளம்பரத் தகராறு-திமுக பிரமுகரை வெட்டிக்கொன்ற அதிமுக நிர்வாகியின் குடும்பம்

திமுக பிரமுகர் சௌந்தரராஜன் கொலை

சுவர் விளம்பரம் செய்வதில் திமுக பிரமுகருக்கும், அதிமுக பிரமுகருக்கும் ஏற்பட்ட தகராறில் சென்னையில் பட்டப்பகலில் கொலை நடந்துள்ளது.

தண்ணீர்ப் பந்தல், சுவர் விளம்பரத் தகராறு-திமுக பிரமுகரை வெட்டிக்கொன்ற அதிமுக நிர்வாகியின் குடும்பம்

சுவர் விளம்பரம் செய்வதில் திமுக பிரமுகருக்கும், அதிமுக பிரமுகருக்கும் ஏற்பட்ட தகராறில் சென்னையில் பட்டப்பகலில் கொலை நடந்துள்ளது.

Published:Updated:
திமுக பிரமுகர் சௌந்தரராஜன் கொலை

சென்னை பிராட்வே, நாராயணப்பா ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சௌந்தரராஜன் (59). இவர் பிராட்வே பகுதியில் கரும்பு ஜூஸ் கடை நடத்திவந்தார். அதிமுக-விலிருந்த சௌந்தரராஜன் திமுக-வில் இணைந்தார். இந்த நிலையில் கடந்த 3.4.2022-ம் தேதி பிராட்வே வடக்கு பேருந்து நிலைய, மெட்ரோ ரயில் நிலைய நுழைவு பகுதியில் சௌந்தரராஜன் நின்றுகொண்டிருந்தார். அப்போது, ஆட்டோவில் வந்த மர்மக் கும்பல் சௌந்தரராஜனை வெட்டிக் கொலை செய்தது. இது தொடர்பாக சௌந்தரராஜனின் தம்பி செல்வராஜ், எஸ்பிளானேடு காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

கொலை
கொலை

அதில், ` `நான் மின்ட் பகுதியில் ஜூஸ் கடை நடத்திவருகிறேன். என் அண்ணன் சௌந்தரராஜன், பிராட்வே பேருந்து நிலைய வளாகத்துக்குள் ஜூஸ் கடை நடத்திவந்தார். அவர் 59-வது வார்டு உறுப்பினராக இருந்தார். சில தினங்களுக்கு அவர் கட்சி சார்பில் நடந்த குடிநீர் பந்தல் அமைக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்தக் குடிநீர் பந்தல் பிராட்வே பேருந்து நிலையத்துக்குள் அமைந்துள்ளது. கடந்த 27.3.2022-ம் தேதி தண்ணீர் பந்தல் அமைந்துள்ள இடத்துக்கு அருகிலுள்ள சுவரில் சுண்ணாம்பு அடிக்கும்போது அதே பகுதியில் பழக்கடை வைத்திருக்கும் அதிமுக வட்ட கழக நிர்வாகி கணேசன், என்னுடைய அண்ணன் சௌந்தரராஜனிடம் `இந்த இடத்தில் நீ சுண்ணாம்பு அடிக்கக் கூடாது’ என்று தகராறில் ஈடுபட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது சம்பந்தமாக கணேசனுக்கும், என்னுடைய அண்ணனுக்கும் இடையே முன்விரோதம் இருந்துவந்தது. கடந்த 3.4.2022-ம் தேதி காலை 9 மணியளவில் தண்ணீர்ப் பந்தலில் வாட்டர் கேன்களை சௌந்தரராஜன் வைத்துக்கொண்டார். நான் அங்குள்ள வியாபாரிகளிடம் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது ஆட்டோவில் வந்த கணேசன், அவரின் மகன் தினேஷ், சதீஷ், கணேசனின் மைத்துனர் இன்பம், பிராட்வே பிளாட்பாரத்தில் குடியிருக்கும் வசந்தகுமார் ஆகியோர் என்னுடைய அண்ணன் சௌந்தரராஜனிடம் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கத்தியால் சௌந்தரராஜனைக் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். என்னுடைய அண்ணனைக் கத்தியால் குத்திக் கொலை செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆட்டோ
ஆட்டோ

அதன்பேரில் போலீஸார், சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்தனர். ஆனால் கொலையாளிகளின் முகம் சரியாக சிசிடிவி-யில் பதிவாகவில்லை. செல்வராஜ் அளித்த தகவலின்படி வியாசர்பாடியைச் சேர்ந்த கணேசன், அவரின் மகன் தினேஷ்குமார், இன்பம், கார்த்திக், குமரேசன், சதீஷ், வசந்த் ஆகியோரை போலீஸார் தேடிவந்தனர். இந்த நிலையில் கணேசன், தினேஷ்குமார், இன்பம், கார்த்திக், குமரேசன் ஆகியோர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த வசந்த் என்கிற வசந்தகுமார் (20) என்பவரை போலீஸார் கைதுசெய்தனர். வசந்தகுமார், பிராட்வே பேருந்து நிலைய பிளாட்பாரத்தில் வசிப்பவர். இவர் எஸ்பிளனேடு காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளி. இவர்மீது கொலை முயற்சி உட்பட ஆறு வழக்குகள் உள்ளன. வசந்தகுமாரிடமிருந்து ஒரு ஆட்டோ, கத்தி ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் சதீஷ் என்பவரை போலீஸார் தேடிவருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``கைதுசெய்யப்பட்ட வசந்தகுமாரிடம் விசாரித்தபோது கொலைக்கான காரணம் தெரியவந்தது. பிராட்வே பேருந்து நிலைய வளாகத்தில் அதிமுக-வினர் விளம்பரம் செய்யும் சுவரில் திமுக-வைச் சேர்ந்த சௌந்தரராஜன், தண்ணீர் பந்தலையொட்டி விளம்பரம் செய்தார். அதை அதிமுக-வைச் சேர்ந்த கணேசன், தட்டிக்கேட்டார். இந்தப் பஞ்சாயத்து காவல் நிலையத்துக்குச் சென்றது. இந்தச் சூழலில் சௌந்தரராஜனிடம் கணேசன், அவரின் மகன்கள் சதீஷ், தினேஷ், உறவினர் இன்பம், வசந்தகுமார் ஆகியோர் தகராறு செய்தனர்.

வசந்தகுமார்
வசந்தகுமார்

திடீரென கணேசன் தரப்பு, சௌந்தரராஜனைக் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுவிட்டது. இந்தக் கொலை வழக்கில் வசந்தகுமாரைக் கைதுசெய்துள்ளோம். சதீஷைத் தவிர மற்றவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டதால் அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளோம். சுவர் விளம்பரப் போட்டியால்தான் இந்தக் கொலைச் சம்பவம் நடந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது" என்றனர்.

நடிகர் கார்த்தி நடித்த `மெட்ராஸ்’ படம் சுவர் ஒன்றை மையப்படுத்தியே எடுக்கப்பட்டிருக்கும். அதைப்போல பிராட்வே பேருந்து நிலையத்தில் பட்டப்பகலில் நடந்த திமுக பிரமுகர் கொலையின் பின்னணியிலும் சுவர் விளம்பரமே உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். மேலும் திமுக பிரமுகர் கொலை வழக்கில் அதிமுக-வைச் சேர்ந்த கணேஷின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism