Published:Updated:

ரோஹினி நீதிமன்றம்: நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட எதிரியை சிறையிலிருந்தே பழிதீர்த்த ரெளடி! |பகுதி 5

கைதுசெய்யப்பட்டவர்கள்
News
கைதுசெய்யப்பட்டவர்கள்

துப்பாக்கியால் சுட்ட இரண்டு பேரும் நீதிபதி வெளியில் செல்லும் வாசல் வழியாகத் தப்பிச்செல்லத் திட்டமிட்டனர். ஆனால் அதற்கு நேரம் கொடுக்காமல் போலீஸார் துப்பாக்கியால் சுட்டுவிட்டனர்.

டெல்லி போலீஸாரின் பலத்த பாதுகாப்பில் வைக்கப்பட்டிருக்கும் ஜிதேந்தரைக் கொலை செய்வது தில்லுவுக்கு எளிதான காரியம் கிடையாது. எனவே, உயிரைப் பற்றிக் கவலைப்படாத தன்னுடைய கூட்டாளிகள் நான்கு பேரை இந்தக் காரியத்தை முடிக்க தில்லு தேர்வு செய்தான். சிறையில் இருந்துகொண்டே தனது ஆட்களுக்கு போன் மூலம் தேவையான உத்தரவுகளைப் பிறப்பித்துக்கொண்டிருந்தான். துப்பாக்கியால் சுடுவதில் மிகவும் கைதேர்ந்த ராகுல் தியாகி, ஜெக்தீப் உட்பட நான்கு பேரை நீதிமன்றத்துக்குள் அனுப்ப தில்லு திட்டமிட்டான். செப்டம்பர் 24-ம் தேதி காலை 10:45 மணிக்கு ஜிதேந்தர் 10 போலீஸாரின் பாதுகாப்போடு திகார் சிறையிலிருந்து ரோஹினி நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டார். 45 நிமிடங்களில் நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்ட ஜிதேந்தர் பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கு காவலில் வைக்கப்பட்டிருந்தான்.

கோர்ட்டில் வாகன சோதனை
கோர்ட்டில் வாகன சோதனை

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஜிதேந்தர் வருவதற்கு முன்பே அவனைக் கொலை செய்ய தயார் செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்துக்குள் வழக்கறிஞர் உடையுடன் வந்துவிட்டனர். அவர்களை நீதிமன்றத்துக்குக் கொண்டு வந்து இறக்கிவிட்ட நபர் தொடர்ந்து காரை நீதிமன்றத்துக்கு வெளியில் தயார்நிலையில் வைத்துக்கொண்டிருந்தார். நீதிமன்றத்தைச் சுற்றி 20-க்கும் மேற்பட்ட போலீஸார் சாதாரண உடையில் சுற்றிக்கொண்டிருந்தனர். இது தவிர ஜிதேந்தரின் பாதுகாப்புக்காக சீருடையுடன் வந்த 10 போலீஸாரும் இருந்தனர். சிறையில் இருந்துகொண்டு தில்லு தனது அடியாட்களுக்கு தொடர்ந்து உத்தரவுகளைப் பிறப்பித்துக்கொண்டேயிருந்தான். பிற்பகல் ஒரு மணிக்கு ஜிதேந்தர் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. உடனே போலீஸார் நீதிமன்றக் காவலிலிருந்து பிரத்யேக வழி வழியாக ஜிதேந்தரை நீதிமன்ற அறைக்குள் கொண்டுவந்தனர். நீதிமன்றத்தில் 20-க்கும் குறைவானவர்களே இருந்தனர். நீதிபதி விசாரணைக்காகத் தனது இருக்கையில் வந்து அமர்ந்தார். உடனே ஜிதேந்தர் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இதையடுத்து சாட்சிக்கூண்டுக்கு வரும்படி ஜிதேந்தர் அழைக்கப்பட்டான். சாட்சிக்கூண்டில் ஜிதேந்தர் நின்று கொண்டிருந்தபோது வழக்கறிஞர் உடையில் இருந்த இரண்டு பேர் தங்களிடமிருந்த துப்பாக்கியை எடுத்து ஜிதேந்தரை பின்புறத்திலிருந்து சுட்டனர். உடனே ஜிதேந்தர் திரும்பியபோது நெஞ்சுப்பகுதியிலும் சரமாரியாகச் சுட்டுவிட்டனர். அவர்கள் வேறு யாரையும் குறிவைக்கவில்லை. ஜிதேந்தரை மட்டும் குறிவைத்து சுட்டுவிட்டுத் தப்பிக்க முயன்றனர். ஆனால் பாதுகாப்புக்கு நின்ற போலீஸார் இரண்டு பேரையும் சுட்டுக் கொன்றனர். இவை அனைத்தும் நீதிமன்றத்துக்குள் சில விநாடிகளுக்குள் நடந்து முடிந்துவிட்டன. அதுவும் நீதிபதியின் கண்முன்பாக நடந்த இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவம் டெல்லியையே உலுக்கியது.

துப்பாக்கியால் சுட்ட இரண்டு பேரும் நீதிபதி வெளியில் செல்லும் வாசல் வழியாக தப்பிச்செல்லத் திட்டமிட்டனர். ஆனால் அதற்கு நேரம் கொடுக்காமல் போலீஸார் துப்பாக்கியால் சுட்டுவிட்டனர். பாதுகாப்பு மிகுந்த நீதிமன்றத்துக்குள் இரண்டு பேர் துப்பாக்கியுடன் வந்து கைதியைச் சுட்டுக் கொன்றிருப்பது நீதிமன்றப் பாதுகாப்பு குறைபாட்டைக் காட்டுவதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இவ்வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி ஒருவர் இது குறித்துக் கூறுகையில், ``இந்தப் படுகொலையை தில்லு மட்டுமல்லாமல் சுனில் ராதே, நவீன் ஆகிய கிரிமினல்களும் சேர்ந்துதான் நடத்தியிருக்கின்றனர். சுனில், நவீன் ஆகியோர் தங்களது ஆள் ஒருவரை அனுப்பியிருந்தனர். நீதிமன்றத்துக்குள் நான்கு பேர் வழக்கறிஞர் உடையுடன் சென்று துப்பாக்கியால் சுட்டுவிட்டு நீதிபதி முன்பு சரணடைவது என்பதுதான் அவர்களின் திட்டம்.

துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள்
துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள்

ஆனால் நான்கு பேரில் இரண்டு பேர் வேறு ஆடைகள் அணிந்து வந்ததால் இரண்டு பேர் மட்டும் நீதிமன்றத்துக்குள் திட்டமிட்டபடி சென்றனர். நீதிமன்றத்துக்குள் வராத உமாங் யாதவ், வினய் இரண்டு பேரும் கொலை நடந்த மறுதினம் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் தில்லு இக்கொலையை எப்படித் திட்டமிட்டு சாதித்தான் என்று தெரியவந்தது” என்றார்.

ரோஹினி கோர்ட்டில் கொலை, துப்பாக்கிச்சூடு நடப்பது ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்பு 2017-ம் ஆண்டு 19 வயது வாலிபர் ஒருவர் நீதிமன்றத்துக்குள் கைதி ஒருவரைச் சுட்டுக்கொலை செய்தார். இச்சம்பவம் நடப்பதற்கு ஒரு மாதத்துக்கு முன்புதான் வேறு ஒரு கைதியும் இதே நீதிமன்றத்துக்குள் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். ரோஹினி கோர்ட்டில் 70 நீதிமன்ற அறைகள் இருக்கின்றன. இங்கு தினமும் 10,000-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். ஆனாலும் நீதிமன்றத்துக்குள் இன்னும் கண்காணிப்பு கேமரா வைக்கவில்லை. சமீபத்திய சம்பவங்களுக்கு பிறகாவது கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று பார் கவுன்சில் தலைவர் இந்தர் சிங் சரோகா தெரிவித்திருக்கிறார்.