Published:Updated:

அந்தரங்க உறுப்புகளில் டூத்ப்ரஷ், சானிடைசர்; ஜூனியரை `கொடூரமாக' ராகிங் செய்த சீனியர் மாணவர்கள்!

ராகிங் கொடுமை

குஜராத்தில், கல்லூரி மாணவர்கள் சிலர் முதலாமாண்டு படிக்கும் 19 வயது மாணவனின் அந்தரங்கப் பகுதிகளில் டூத்ப்ரஷ், சானிடைசர் ஆகியவற்றை நுழைத்து ராகிங் செய்த சம்பவம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

அந்தரங்க உறுப்புகளில் டூத்ப்ரஷ், சானிடைசர்; ஜூனியரை `கொடூரமாக' ராகிங் செய்த சீனியர் மாணவர்கள்!

குஜராத்தில், கல்லூரி மாணவர்கள் சிலர் முதலாமாண்டு படிக்கும் 19 வயது மாணவனின் அந்தரங்கப் பகுதிகளில் டூத்ப்ரஷ், சானிடைசர் ஆகியவற்றை நுழைத்து ராகிங் செய்த சம்பவம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

Published:Updated:
ராகிங் கொடுமை

கல்லூரிகளில் ராகிங் செய்வதென்பது சட்டத்தின்படி தண்டனைக்குரிய செயலாக இருந்தும்கூட, இந்தியாவில் இன்னும் பல கல்லூரிகளில் ராகிங் கலாசாரம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்புகூட, மத்தியப் பிரதேசத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள், தங்களின் ஜூனியர் மாணவர்களை வரிசையாக நிற்கவைத்து கன்னத்தில் அறைந்து ராகிங் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக வைரலானது.

ராகிங் கொடுமை
ராகிங் கொடுமை

இந்த நிலையில், குஜராத்தில், கல்லூரி மாணவர்கள் சிலர் முதலாமாண்டு படிக்கும் 19 வயது மாணவனின் அந்தரங்கப் பகுதியில் டூத்ப்ரஷ், சானிடைசர் ஆகியவற்றை நுழைத்து ராகிங் செய்த சம்பவம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

இது தொடர்பாக வெளியான தகவல்களின்படி, ராஜ்கோட்டில் பி.பி.ஏ முதலாமாண்டு படிக்கும் மாணவன் ஒருவன் குளிப்பதை, சில மாணவர்கள் படமெடுத்து மிரட்டியிருக்கின்றனர். பின்னர் அந்த மாணவனிடம், அந்தரங்க உறுப்புகளை வெட்டுவது, காதுகளை வெட்டுவது அல்லது விடுதியின் மேலிருந்து கீழே குதிப்பது என ஒன்றைத் தேர்வுசெய்யுமாறும், அப்படிச் செய்யாவிட்டால் அந்தரங்க உறுப்புகளில் டூத் பிரஷ், சானிடைசர் போன்றவற்றை நுழைப்போம் என்றும் கூறி ராகிங் செய்ததாகக் கூறப்படுகிறது.

கைது
கைது

இதற்கு அந்த மாணவன் மறுக்கவே, ராகிங் செய்தவர்கள் சொன்னவாறு அப்படியே செய்திருக்கின்றனர். இவ்வாறு நிகழ பாதிக்கப்பட்ட மாணவன் ஒருநாள் தன்னுடைய சகோதரியிடம் போனில் பேசிக்கொண்டிருந்தபோது, தான் துன்புறுத்தப்பட்டதைப்பற்றிக் கூறியிருக்கிறார். அதையடுத்து அந்த மாணவனின் தந்தை அக்டோபர் 20-ம் தேதியன்று, ராகிங் செய்த மாணவர்கள் மீது போலீஸில் புகாரளித்திருக்கிறார். மேலும், பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தை உறுதிசெய்ய போலீஸார் மருத்துவ பரிசோதனையும் நடத்தினர். அதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கும் விதமாக, கல்லூரி மாணவர்கள் 3 பேரை போலீஸார் வழக்கு பதிவுசெய்து கைதுசெய்திருக்கின்றனர்.