Published:Updated:

புதுக்கோட்டை: குட்கா வழக்கில் கைதான நபர் சிறையில் மரணம் - கதறும் உறவினர்கள்; நடந்தது என்ன?

இறந்தவரின் உறவினர்

``அவருக்கு உடல்நலக் கோளாறு இருப்பது தெரிந்தும், கைதுசெய்த போலீஸார், அவருக்கு முறையான சிகிச்சை அளிக்காமல் சிறையில் அடைத்ததால்தான் அவர் உயிரிழந்திருக்கிறார்.

புதுக்கோட்டை: குட்கா வழக்கில் கைதான நபர் சிறையில் மரணம் - கதறும் உறவினர்கள்; நடந்தது என்ன?

``அவருக்கு உடல்நலக் கோளாறு இருப்பது தெரிந்தும், கைதுசெய்த போலீஸார், அவருக்கு முறையான சிகிச்சை அளிக்காமல் சிறையில் அடைத்ததால்தான் அவர் உயிரிழந்திருக்கிறார்.

Published:Updated:
இறந்தவரின் உறவினர்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே காரையூரைச் சேர்ந்தவர் சின்னதுரை. இவர் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்துவருவதாக காரையூர் போலீஸாருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. அவரிடம் சுமார் 50 கிலோ அளவிலான குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்த போலீஸார், அவரைக் கைதுசெய்தனர். தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புதுக்கோட்டை மாவட்டச் சிறையில் அடைத்தனர்.

இறந்தவரின் உறவினர்
இறந்தவரின் உறவினர்

சிறையில் இருந்த சின்னதுரைக்கு கடந்த 21-ம் தேதி திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து, சிறைத்துறையினர் அவரை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு சின்னத்துரையைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், `போலீஸாரின் அலட்சியத்தால்தான் சின்னதுரை உயிரிழந்திருக்கிறார். அவர் உயிரிழிப்புக்கான உண்மைக் காரணம் தெரியாமல் அவரின் உடலை வாங்க மாட்டோம்’ என்று கூறி, மருத்துவமனை முன்பு உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நீதிபதி மற்றும் போலீஸார் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, போராட்டத்தைக் கைவிட்டு சின்னதுரையின் உடலை வாங்கிச் சென்றனர்.

இறந்தவரின் உறவினர்
இறந்தவரின் உறவினர்

இது குறித்து சின்னதுரையின் உறவினர்களிடம் கேட்டபோது, "சின்னதுரைக்கு இதயநோய் பிரச்னை இருந்தது, கடந்த மாதம்தான், ஆஞ்சியோ செஞ்சாங்க. ரொம்ப சீரியஸா இருந்துதான் தேறி வந்தாரு. அவசர அவசரமா அவரைக் கைதுசெஞ்சுட்டாங்க. தினமும் மருந்து, மாத்திரைகளைக் கட்டாயம் எடுக்கணும்னு டாக்டர்கள் சொன்னாங்க. அவங்க எழுதிக்கொடுத்த மாத்திரை, மருந்துகளைக் கொடுத்து அனுப்ப போலீஸார் விடலை. அவருக்கு உடல்நலக் கோளாறு இருப்பது தெரிந்தும்,கைதுசெய்த போலீஸார், அவருக்கு முறையான சிகிச்சை அளிக்காமல் சிறையில் அடைத்ததால்தான் அவர் உயிரிழந்திருக்கிறார். உரிய விசாரணை நடத்தணும்" என்றனர்.

இறந்தவரின் உறவினர்கள்
இறந்தவரின் உறவினர்கள்

மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்த மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி, பிரேத பரிசோதனை கூடத்துக்கு சென்று உயிரிழந்த சின்னதுரையின் உடலைப் பார்வையிட்டதோடு, அவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் நடந்த விவரம் குறித்து விசாரணை நடத்தினார். அதைத் தொடர்ந்து பிரேத பரிசோதனை நடத்துவதற்கு சின்னதுரையின் உறவினர்கள் அனுமதி அளித்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்ததும் அதன் அடிப்படையில், காரையூர் காவல்துறையினர், சம்பவத்தன்று அவரின் உடல் நிலையைப் பரிசோதித்த அரசு மருத்துவர், சிறைக் காவலுக்கு அனுப்பிய இலுப்பூர் நீதிமன்ற நீதிபதி ஆகியோரிடம் நீதிபதி ஜெயந்தி விசாரணை மேற்கொள்வார். அதன் பிறகுதான் அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.