Published:Updated:

சென்னை: கஞ்சியில் விஷம்; கணவனைக் கொலை செய்த மனைவி! -ஆண் நண்பருடன் சிக்கியது எப்படி?

கொலைசெய்யப்பட்ட செல்வம், அவரின் மனைவி விஜயலட்சுமி
கொலைசெய்யப்பட்ட செல்வம், அவரின் மனைவி விஜயலட்சுமி

சென்னையில் கணவனுக்குக் கஞ்சியில் விஷத்தைக் கலந்து கொடுத்து அவரைக் கொலைசெய்த மனைவி, அவரின் ஆண் நண்பர் இருவரையும் போலீஸார் கைதுசெய்தனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை சூளைமேடு கண்ணகிதெருவைச் சேர்ந்தவர் செல்வம் (42). பெயின்ட்டர். இவரின் மனைவி விஜயலட்சுமி (38). இந்தத் தம்பதியருக்கு இரண்டு மகள்கள். கடந்த செப்டம்பர் 2-ம் தேதி செல்வத்துக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக செல்வத்தை அவரின் மனைவி விஜயலட்சுமி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் 6-ம் தேதி செல்வம் உயிரிழந்தார்.

விஜயலட்சுமி
விஜயலட்சுமி

இது குறித்து செல்வத்தின் உறவினர் வேல்பாண்டியன் என்பவர் சூளைமேடு காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதில் ``என் மனைவியின் தாய்மாமனான செல்வத்துக்கு உடல்நலம் சரியில்லை என அவரின் மனைவி விஜயலட்சுமி எனக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார். நான் தி.நகரிலிருந்து உடனடியாக சூளைமேட்டுக்கு வந்தேன். அப்போது செல்வம், சுயநினைவில்லாமல் இருந்தார். அதனால் அவரை ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் மருத்துவனைக்குக் கொண்டு சென்றோம். 5-ம் தேதி செல்வத்துக்கு ஸ்கேன், எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது முகத்திலும், நெஞ்சுப் பகுதியிலும் பலமாக அடி விழுந்திருப்பதாகக் கூறினார்கள். அது குறித்து விஜயலட்சுமியிடம் கேட்டபோது குடித்துவிட்டுக் கீழே விழுந்து கிடந்தார் என்று பதிலளித்தார். அதன் பிறகு 6-ம் தேதி செல்வம் இறந்துவிட்டார்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன், `சந்தேக மரணம்’ என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து செல்வத்தின் மரணம் குறித்து விசாரித்தார். இந்த வழக்கில் திடீர் திருப்பமாக கணவனுக்கு உணவில் விஷம்வைத்துக் கொடுத்த குற்றச்சாட்டில் மனைவி விஜயலட்சுமியும், அவரின் ஆண் நண்பரான மோகனையும் போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

இது குறித்து சூளைமேடு போலீஸார் கூறுகையில், ``விஜயலட்சுமியும் மோகன் என்கிற முண்டக்கண் மோகன் என்பவருக்கும் மெட்ரோ ரயிலில் வேலைக்குச் செல்லும்போது பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அந்தப் பழக்கத்தை செல்வம் கண்டித்திருக்கிறார். அதனால் செல்வத்தைக் கொலை செய்ய விஜயலட்சுமியும் மோகனும் திட்டமிட்டிருக்கின்றனர்.

மோகன்
மோகன்
``எனக்குத் திருமணம் நடக்காததால் கத்தியில் குத்தினேன்!" - திருமணமான காதலியைக் கொலை செய்த இளைஞர்!

அதனால் 2-ம் தேதி செல்வம் சாப்பிடும் கஞ்சியில் பூச்சிக் கொல்லி மருந்தைக் கலந்து விஜயலட்சுமி கொடுத்தார். அதைச் சாப்பிட்ட செல்வம் மயங்கி விழுந்தார். பின்னர் எதுவும் நடக்காததுபோல விஜயலட்சுமி, கணவர் செல்வத்தை மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு செல்வத்துக்குக் குடிப்பழக்கம் இருந்ததால், உடல்நலம் சரியில்லாமல் அவர் இறந்துவிட்டதாகக் கூறி அனைவரையும் நம்பவைத்திருக்கிறார். இந்தச் சமயத்தில்தான் செல்வத்தின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் சாப்பிட்ட உணவில் விஷம் கலந்திருந்தது தெரியவந்தது. அது தொடர்பாக விஜயலட்சுமியிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்தார். நீண்ட விசாரணைக்குப் பிறகு உணவில் விஷம் கலந்து கொடுத்ததை விஜயலட்சுமி ஒப்புக்கொண்டார்.

நாகை : திருமணம் மீறிய உறவுக்கு இடையூறு! - பெற்ற மகனை கொன்ற கொடூரத் தாய்

அதனால் அவரையும் இந்தக் கொலைக்கு உடந்தையாக இருந்த மோகனையும் கைதுசெய்திருக்கிறோம். மோகன், சென்னை நெற்குன்றத்தில் வசித்துவருகிறார். அவரின் சொந்த ஊர் குமரி மாவட்டம். மோகன் மீது சென்னை, குமரி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏழு கொலை வழக்குகளும் நான்கு கொலை முயற்சி வழக்குகளும் உள்ளன" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு