Published:Updated:

ஜார்கண்ட்: செவிலியர்கள் அலட்சியம் - இன்குபேட்டரில் வைக்கப்பட்ட குழந்தையைக் கடித்த எலிகள்!

இன்குபேட்டரில் குழந்தையை கடித்த எலிகள்- ஜார்கண்ட் ( சித்தரிப்புப் படம் )

ஜார்கண்ட் மாநிலத்தில், அரசு மருத்துவமனையொன்றில், இன்குபேட்டரில் வைக்கப்பட்டிருந்த பிறந்து நான்கு நாள்களே ஆன குழந்தையை எலிகள் கடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட்: செவிலியர்கள் அலட்சியம் - இன்குபேட்டரில் வைக்கப்பட்ட குழந்தையைக் கடித்த எலிகள்!

ஜார்கண்ட் மாநிலத்தில், அரசு மருத்துவமனையொன்றில், இன்குபேட்டரில் வைக்கப்பட்டிருந்த பிறந்து நான்கு நாள்களே ஆன குழந்தையை எலிகள் கடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
இன்குபேட்டரில் குழந்தையை கடித்த எலிகள்- ஜார்கண்ட் ( சித்தரிப்புப் படம் )

ஜார்கண்ட் மாநிலம் கிரிதி மாவட்ட அரசு மருத்துவமனையின் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவில், இன்குபேட்டரில் வைக்கப்பட்டிருந்த பிறந்து நான்கு நாள்களே ஆன குழந்தையை எலிகள் கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று, ராஜேஷ் சிங் என்பவரின் மனைவி மம்தா தேவி பிரசவத்துக்காக, கிரிதி மாவட்டம் சைதாதியில் உள்ள அரசு மருத்துவமனையின் மகப்பேறு மற்றும் குழந்தை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அன்றே மம்தா தேவிக்கு பெண்குழந்தையும் பிறந்துள்ளது. பின்னர், குழந்தைக்கு மூச்சுவிடுவதில் சிரமம் இருந்ததால், செவிலியர்கள் குழந்தையை இன்குபேட்டரில் வைத்துள்ளனர். இதன் பிறகுதான் குழந்தையை எலிகள் கடித்த சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பேசிய குழந்தையின் தந்தை ராஜேஷ், ``திங்கள்கிழமை அதிகாலையில், திடீரென மருத்துவர்கள் எங்களிடம் வந்து, குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகக் கூறினர். பின்னர் குழந்தையை ஒரு துணியால் சுற்றி எங்களிடம் ஒப்படைத்து, பெரிய மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்றார்கள். அப்போது அவர்கள் குழந்தையை எலிகள் கடித்ததைப் பற்றி எதுவுமே கூறவில்லை.

இன்குபேட்டரில் குழந்தையை கடித்த எலிகள்- ஜார்கண்ட்
இன்குபேட்டரில் குழந்தையை கடித்த எலிகள்- ஜார்கண்ட்
Pixabay

அதையடுத்து, நாங்கள் தன்பாத்தில் உள்ள பாட்லிபுத்ரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தையை சேர்த்தபிறகு, அங்குள்ள மருத்துவர்கள்தான் குழந்தையை எலிகள் கடித்துள்ளதாகக் கூறினார்கள். இதனைக்கேட்டு நாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தோம். பின்னர் இதுதொடர்பாக என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், கிரிதி மருத்துவமனை மருத்துவர்களிடம் கேட்டபோது முதலில் இல்லை என்று மறுத்தவர்கள், கடைசியில் ஆமாம் குழந்தையை எலிகள் கடித்தன என்று ஒப்புக்கொண்டனர். இன்குபேட்டர் தரையில் இருந்து கிட்டத்தட்ட 4 அடி உயரத்தில் இருந்தும், குழந்தையை எலிகள் கடித்துள்ளன. மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியமே காரணம் இதற்கு முழு காரணம்" என்று கூறினார்.

இந்த நிலையில், உயிருக்குப் போராடிவந்த குழந்தை, அபாயகட்டத்தை தண்டியுள்ளதாக கிரிதி மாவட்ட துணை ஆணையர் நமன் பிரியேஷ் லக்ரா நேற்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தச் சம்பவம் குறித்து பிரியேஷ் லக்ரா திங்கள்கிழமை பேசியபோது, ``சம்பவம் நடந்தபோது பணியிலிருந்த மருத்துவர் சுந்தீப் குமார் மீது உரிய எடுக்குமாறு மாநில சுகாதாரத் துறை கூடுதல் தலைமைச் செயலாளருக்குக் கடிதம் எழுதியுள்ளோம். அதுமட்டுமல்லாமல், இது தொடர்பாக இரண்டு செவிலியர்கள், தூய்மைப் பணியாளர் ஒருவர் நீக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism