Published:Updated:

காஞ்சிபுரம்: கணவன் கொலை; நாடகமாடிய மனைவி; 13 நாள்களுக்குப்பின் வெளிவந்த உண்மை!

Murder
Murder

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கணவனைக் கொடூரமாக கொலை செய்த மனைவி, 13 நாள்களுக்குப் பிறகு காவல் நிலையத்தில் சரண் அடைந்து உண்மையைக் கூறியிருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆதனஞ்சேரி, திருமகள் நகர் பகுதியில் குடியிருந்தவர் தங்கவேல் (44). இவரின் மனைவி விமலாராணி ( 37). இந்தத் தம்பதியினருக்கு 14 வயதில் மகன் உள்ளார். தங்கவேல் ஓரகடம் பகுதியிலுள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் தங்கவேலை சில நாள்களாகக் காணவில்லை. அதனால் அவரின் சகோதரர் சக்திவேல், தங்கவேலை செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது போனை எடுத்த விமலாராணி, ஆன்லைன் வகுப்பிற்காக செல்போனை வீட்டில் வைத்து விட்டு வேலைக்கு தங்கவேல் சென்றிருப்பதாகக் கூறினார். அதை சக்திவேலும் உண்மையென நம்பினார்.

தங்கவேல்
தங்கவேல்

இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 1- ம் தேதி சக்திவேல், தன்னுடைய தம்பி தங்கவேலுவிடம் போனில் பேச தொடர்பு கொண்டார். அப்போது போனை யாரும் எடுக்கவில்லை. அதனால் 2-ம் தேதி மீண்டும் போன் செய்தார். அப்போது போன் ஸ்விட்ச் ஆப் என பதில் வந்தது. அதனால் சந்தேகமடைந்த சக்திவேல், தங்கவேலின் வீட்டுக்கு வந்தார். அப்போது வீடு பூட்டப்பட்டிருந்தது. இந்தத் தகவலை குடும்பத்தினரிடம் சக்திவேல் கூறினார். அதனால் தங்கவேல், விமலாராணி, மகன் ஆகிய மூன்று பேரைக் காணவில்லை என மணிமங்கல் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார் மூன்று பேரையும் தேடிவந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் காணாமல் போன தங்கவேலின் மனைவி விமலாராணி அவரது மகனை அழைத்துக் கொண்டு காவல்நிலையத்தில் சரண் அடைந்தார். அதைக் கேள்விபட்ட தங்கவேலின் குடும்பத்தினர் காவல் நிலையத்துக்கு வந்தனர். அப்போது விமலாராணியிடம் தங்கவேல் எங்கே என்று கேள்வி கேட்டனர். அதற்கு விமலா ராணி, குடும்பத் தகராறில் கடந்த 28-ம் தேதி தங்கவேலை வெட்டி கொலை செய்து விட்டதாக கூறினார். அதைக்கேட்டு தங்கவேலின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். விமலாராணி அளித்த தகவலின்படி அவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

சென்னை: டாஸ்மாக் கடையில் நடந்த மோதல்; பழிக்குப் பழியாக நடுரோட்டில் நடந்த கொலை!
கொலை
கொலை

இதுகுறித்து மணிமங்கலம் போலீஸார் கூறுகையில், " தங்கவேலின் பூர்வீகம் சேலம். தங்கவேலுக்கும் விமலாராணிக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. விமலாராணிக்கும் சேலத்தை சேர்ந்த ஒருவருக்கும் ஏற்கெனவே பழக்கம் இருந்தது. இந்தத் தகவல் தெரிந்ததும் மனைவி, மகனை அழைத்துக் கொண்டு தங்கவேல் சென்னை காஞ்சிபுரத்துக்கு குடிபெயர்ந்தார். ஊர் மாறி வந்தாலும் விமலாராணி, சேலத்தைச் சேர்ந்த தன்னுடைய ஆண் நண்பருடன் செல்போனில் தொடர்ந்து பேசி வந்தார். இந்தத் தகவல் தங்கவேலுக்கு தெரிந்ததும் மனைவியைக் கண்டித்தார். ஆனால் அவர் கேட்கவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தச் சமயத்தில்தான் கடந்த 28-ம் தேதி மதியம், தங்கவேலுக்கும் விமலாராணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்த விமலாராணி, சமையலைறயிலிருந்த அருவாமனையை எடுத்து தங்கவேலின் கழுத்தில் இரண்டு தடவை வெட்டியிருக்கிறார். அதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த தங்கவேல் உயிரிழந்திருக்கிறார். பின்னர் அவரின் சடலத்தை பெட் ரூம்பில் மறைத்து வைத்த விமலாராணி, தன்னுடைய ஆண் நண்பருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். சேலத்திலிருந்து காஞ்சிபுரத்துக்கு வந்த விமலாராணியின் ஆண் நண்பர் மூலம் தங்கவேலின் சடலத்தை அச்சரப்பாக்கம் அடுத்த தொழுபேடு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் எரித்துவிட்டு எதுவும் நடக்காதது போல விமலாராணி நாடகமாடியிருக்கிறார்.

கைது
கைது
representational image

தங்கவேல் எங்கே என்று அவரின் குடும்பத்தினர் கேட்டு நச்சரிக்கத் தொடங்கியதும் வீட்டை பூட்டி விட்டு மகனுடன் விமலாராணி தலைமறைவாகி விட்டார். பின்னர் 13 நாள்களுக்குப் பிறகு விமலாராணி, காவல் நிலையத்தில் சரண் அடைந்து அச்சரப்பாக்கம் அடுத்த தொழுபேடு தேசிய நெடுஞ்சாலையில் தங்கவேலின் சடலத்தை எரித்த தகவலைத் தெரிவித்தார். ஏற்கெனவே அங்கிருந்து ஒரு ஆணின் சடலம் மீட்கப்பட்டதை மணிமங்கலம் போலீஸார் உறுதி செய்தனர். இருப்பினும் அது தங்கவேலின் சடலமாக என்பதை உறுதி செய்ய டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். இந்தக் கொலையில் தொடர்புடைய விமலா ராணியின் ஆண் நண்பரைத் தேடிவருகிறோம்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு