Published:Updated:

கன்னியாகுமரி: 'கஞ்சா வாங்கிய இளைஞர்கள்; கொலையில் முடிந்த தகராறு; இருவர் கைது!'

கைதுசெய்யப்பட்ட கொலையாளிகள்
கைதுசெய்யப்பட்ட கொலையாளிகள்

சகாய ஷாஜி ஜெனிஸ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ஆனால், மதுபோதையில் இருந்த ஜேசுராஜ், செல்வின் ஆகியோரால் ஓடமுடியவில்லை. இதனால் பலமான கத்திக்குத்து காயங்களுடன் அவர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

கன்னியாகுமரி - நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் முருகன் குன்றம் பகுதியில் கடந்த 24-ம் தேதி இருவர் கொலை செய்யப்பட்டுக்கிடந்தனர். ஒருவர் நான்குவழிச்சாலை பகுதியிலும் மற்றொருவர், சாலையை ஒட்டிய புதரிலும் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தனர். அதுகுறித்து பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து சென்று நடத்திய விசாரணையில் இறந்தவர்கள் கன்னியாகுமரி சுனாமி காலனியைச் சேர்ந்த ஜேசுராஜ் (24) மற்றும் குண்டல் பகுதியைச் சேர்ந்த செல்வின் (24) என்பதும் தெரியவந்தது. மேலும் அப்பகுதியில் கத்திக்குத்து காயங்களுடன் சகாய ஷாஜி ஜெனிஷ் என்ற இளைஞர் கிடந்தார். சகாய ஷாஜி ஜெனிஷை உயிருடன் மீட்ட போலீசார் கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த இரண்டுபேரின் சடலங்களையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் இறந்த ஜேசுராஜ் மீது கஞ்சா தொடர்பான வழக்குகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா கும்பல்களுக்குள் மோதல் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை முடுக்கிவிட்டது காவல்துறை.

கன்னியாகுமரியில் நடந்த இரட்டைக்கொலை
கன்னியாகுமரியில் நடந்த இரட்டைக்கொலை

மேலும் கத்திக்குத்து காயங்களுடன் மீட்கப்பட்ட ஜெனிசிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் கஞ்சா விற்பனையில் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் இந்த கொலை நடந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா விற்கும் கும்பலைச் சேர்ந்த மூன்றுபேரை போலீஸா வலைவீசி தேடினர். அதில் அகஸ்தீஸ்வரத்தைச் சேர்ந்த பக்கீஸ்வரன், முத்துக்குமார் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான பில்லா ராஜேஷ் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

கைது செய்தவர்களிடம் விசாரணை நடத்தியதில் கஞ்சாவை வாங்கிக்கொண்டு பணம் கொடுக்காததால் அவர்களை கத்தியால் குத்தியதாக வாக்குமூலம் கொடுத்ததாக கூறப்படுகிறது. கத்திக்குத்தில் இறந்தவர்கள் மற்றும் காயம் அடைந்த சகாய ஷாஜி ஜெனிஸ் ஆகியோர் சம்பவத்தன்று நான்குவழிச்சாலை பகுதியில் மது அருந்திக் கொண்டு இருந்திருக்கிறார்கள். இவர்கள் அகஸ்தீஸ்வரத்தைச் சேர்ந்த பக்கீஸ்வரன், முத்துக்குமார், பில்லா ராஜேஷ் ஆகியோரிடம் அடிக்கடி கஞ்சா வாங்கி வந்திருக்கிறார்கள். அன்றும் வழக்கம்போல கஞ்சா வாங்கியிருக்கிறார்கள்.

Murder
Murder

ஆனால், மது போதையில் இருந்த ஜேசுராஜ், செல்வின், சகாய ஷாஜி ஜெனிஷ் ஆகியோர் பணம் கொடுக்க மறுத்திருக்கிறார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த பக்கீஸ்வரன், முத்துக்குமார் மற்று பில்லா ராஜேஷ் ஆகியோர் மறைத்து வைத்திருந்த கத்தியால் மூன்றுபேரையும் குத்தியுள்ளனர். சகாய ஷாஜி ஜெனிஸ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ஆனால், மதுபோதையில் இருந்த ஜேசுராஜ், செல்வின் ஆகியோரால் ஓடமுடியவில்லை. இதனால் பலமான கத்திக்குத்து காயங்களுடன் அவர்கள் சம்பவ இடத்திலேயே இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் பில்லா ராஜேஷ் குரூப் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. கஞ்சா கடத்தி விற்கும் வழக்கில் பில்லா ராஜேஷ் முக்கிய குற்றவாழியாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. கஞ்சா கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் நடந்த இரட்டைக்கொலை சம்பவம் குமரியை அதிர வைத்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு