Published:Updated:

கர்நாடகா: மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை; தலைமை ஆசிரியரைக் கட்டைகளால் தாக்கிய மாணவிகள்!

பாலியல் தொல்லை

நேற்று முன்தினம் இரவு, விடுதிக்கு வந்த இவர் ஒரு மாணவியை அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருக்கிறார்.

கர்நாடகா: மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை; தலைமை ஆசிரியரைக் கட்டைகளால் தாக்கிய மாணவிகள்!

நேற்று முன்தினம் இரவு, விடுதிக்கு வந்த இவர் ஒரு மாணவியை அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருக்கிறார்.

Published:Updated:
பாலியல் தொல்லை

கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தின் கட்டேரி பகுதியில் பெண்கள் உயர்நிலைப்பள்ளி அமைந்திருக்கிறது. இங்கு, சின்மயான்ந்த் மூர்த்தி என்பவர் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். பள்ளியின் அருகேயுள்ள மாணவிகள் விடுதிக்கு, இரவு நேரங்களில் வரும் இவர், மாணவிகளை விடுதியிலுள்ள தனி அறைக்கு வரவழைத்து, தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுவந்திருக்கிறார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, விடுதிக்கு வந்த இவர் ஒரு மாணவியை அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது, அந்த மாணவி கண்ணீருடன் அறையைவிட்டு வெளியேறி, சக மாணவிகளிடம் நடந்ததைக் கூறிக் கதறி அழுதிருக்கிறார்.

கைதான தலைமை ஆசிரியர்.
கைதான தலைமை ஆசிரியர்.

வெகுண்டெழுந்த மாணவிகள், விடுதி வளாகத்திலுள்ள கட்டை, குச்சிகளை எடுத்துக்கொண்டு, தலைமை ஆசிரியர் சின்மயான்ந்த் மூர்த்தியைச் சூழ்ந்துகொண்டு, ``அவளை எதுக்குத் தொடுறீங்க சார்... நாங்க ஏதாவது தப்பு பண்ணினோமா... நீயெல்லாம் ஹெட்மாஸ்டரா?’ எனக் கேள்விகளால் துளைத்தெடுத்தனர். பின்னர், கோபமடைந்த மாணவிகள் குச்சி, கட்டைகளால் அவரை நையப்புடைத்தனர். தகவலறிந்து அங்கு வந்த கிராம மக்களும், தலைமை ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். தலைமை ஆசிரியரிடம் கேள்விகளைக் கேட்டு, மாணவிகள் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டுவருகிறது.

போலீஸார் சின்மயான்ந்த் மூர்த்தி மீது, IPC Sections 354 A (பாலியல் தொல்லை), 354D (பெண்களை பாலியல்ரீதியாகப் பின்தொடர்தல்), 506 (மிரட்டல்) மற்றும் போக்சோ உட்பட, ஆறு வழக்குகள் பதிவுசெய்து அவரைச் சிறையிலடைத்தனர். ‘வேலியே பயிரை மேய்ந்த’ கதையாக, மாணவிகளுக்குத் தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தது, அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.