Published:Updated:

கரூர்: வாய்க்காலில் பெண்ணிடம் அத்துமீறிய இளைஞர்! - நையப்புடைத்த பொதுமக்கள்

குளித்தலை

வாய்க்காலில் பாத்திரம் கழுவிக்கொண்டிருந்த பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்ற இளைஞரை, பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து, காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

கரூர்: வாய்க்காலில் பெண்ணிடம் அத்துமீறிய இளைஞர்! - நையப்புடைத்த பொதுமக்கள்

வாய்க்காலில் பாத்திரம் கழுவிக்கொண்டிருந்த பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்ற இளைஞரை, பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து, காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Published:Updated:
குளித்தலை

கரூர் மாவட்டம், குளித்தலை சுங்ககேட் அருகேயுள்ள தென்கரை வாய்க்கால் பகுதியில் பெண் ஒருவர் இரவு பாத்திரம் கழுவிக்கொண்டிருந்தார். அப்போது, அந்த வாய்க்காலில் நீந்தியபடி அங்கு வந்த வாலிபர் ஒருவர் அந்தப் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், அந்த இளைஞரிடமிருந்து தப்பிக்க முயன்றிருக்கிறார். ஆனால், அந்த இளைஞர் அந்தப் பெண்ணிடம் தொடர்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயல, அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் சத்தம் போட்டிருக்கிறார். அந்தப் பெண்ணின் சத்தத்தைக் கேட்டு அங்கிருந்த வாலிபர்கள் வாய்க்காலுக்குள் குதித்து, அந்த இளைஞரைப் பிடித்து கரைக்குக் கொண்டு வந்தனர்.

பின்னர் அந்த இளைஞரை அவர்கள் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது. அப்போது, குளித்தலை சுங்ககேட் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த குளித்தலை போக்குவரத்து காவல் ஆய்வாளர் மற்றும் இதர போலீஸார் ஸ்பாட்டுக்கு விரைந்து வந்ததோடு, அந்த இளைஞரைப் பிடித்து காவல் நிலையத்துக்கு கொண்டு போக முயன்றனர்.

குளித்தலை காவல் நிலையம்
குளித்தலை காவல் நிலையம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனால், அங்கு ஏராளமானவர்கள் கூடி அந்த நபரைத் தாக்கியபோது, போலீஸாரும் தாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. பொதுமக்களால் போலீஸாரின் வாகனமும் தாக்குதலுக்கு உள்ளானதாகத் தெரிகிறது. இருப்பினும், போலீஸார் ஒருவழியாக அந்த இளைஞரை பொதுமக்களிடமிருந்து மீட்டு, குளித்தலை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

வாய்க்காலில் பாத்திரம் கழுவிக்கொண்டிருந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற அந்த இளைஞரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், அந்த நபர் நாமக்கல் மாவட்டம், கீழப்பாளையத்தைச் சேர்ந்த சிவக்குமார் (30) என்பது தெரியவந்தது. தொடர்ந்து, அந்த இளைஞர்மீது போலீஸார் வழக்கு பதிந்து, கைதுசெய்தனர்.