Published:Updated:

குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 11 பேர்; சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்! - நடந்தது என்ன?

சிறை தண்டனை!
சிறை தண்டனை!

"இதன்மூலம், 'மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது' என்று வாகன ஓட்டிகளுக்கு அச்சம் ஏற்படும். அதனால், இங்கு நடக்கும் பெருவாரியான விபத்துகள் குறையும். இந்த நடவடிக்கையை தொடரப் போகிறோம்" என்று கரூர் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கரூர் நகர எல்லைக்குள் மது அருந்திவிட்டு லாரி மற்றும் இருசக்கர வாகனங்களை இயக்கி வந்த 11 பேர்களுக்கு தலா 4 நாள்கள் சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்திருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சோதனை நடத்தும் போலீஸார்  (மாதிரி படம்)
சோதனை நடத்தும் போலீஸார் (மாதிரி படம்)
நித்யானந்தா ஆசிரமம்: பெண் பக்தை மீட்பு விவகாரம்; இரு தரப்பிலும் வழக்கு பதிவு, கைது! - நடந்தது என்ன?

பொதுவாக, மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்கி வருபவர்களுக்கு அபராத தொகை மட்டும் செலுத்தச் சொல்வது வழக்கம். கரூர் மாவட்டத்தில் நடக்கும் அநேக விபத்துகள், மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டிவருபவர்களால்தான் நடைபெறுகிறது என்று கரூர் மாவட்ட காவல்துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. காரணம், கரூர் மாவட்டத்தில் கன்னியாகுமரி டு காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலை, திருச்சி டு கோவை சாலை, கரூர் டு ஈரோடு சாலை என்று முக்கிய சாலை மார்க்கங்கள் இந்த மாவட்டத்தில் உள்ளன. அதனால், மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்கி விபத்து ஏற்படுத்துவதை தடுக்கும்பொருட்டு, மாவட்ட எஸ்.பி, போக்குவரத்துப் பிரிவு காவலர்களை முடுக்கிவிட்டார்.

சோதனை நடத்தும் போலீஸார்
சோதனை நடத்தும் போலீஸார்

அதன்படி, கரூர் நகர போக்குவரத்துக் காவல் நிலைய ஆய்வாளராக இருக்கும் கார்த்திகேயன், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். ஹெல்மெட் அணியாமல் செல்வதால் ஏற்படும் ஆபத்துகள், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் நடக்கும் விபத்துகள் குறித்து பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். அதையும் மீறி வரும் அத்தகைய வாகன ஓட்டிகளை நிறுத்தி, அவர்களுக்குத் தேவையான அறிவுரைகளைச் சொல்லி அனுப்பிவந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி வருபவர்களை கார்த்திகேயன் தலைமையிலான போலீஸார், ஆய்வு செய்தனர். அப்போது, கரூர் போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி வந்ததாக, 3 லாரி ஓட்டுநர்கள் மற்றும் 8 இருசக்கர வாகன ஓட்டிகள் என 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்கள் 11 பேரையும் கரூர் ஜே.எம் - 1 நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இவர்களுக்குத் தண்டனையாக அபராதத் தொகையாக 11 வாகன ஓட்டிகளுக்கும் தலா பத்தாயிரம் வீதம், மொத்தம் ரூபாய் 1,10,000/- அபராதத் தொகை விதித்தார்.

சோதனை நடத்தும் போலீஸார்
சோதனை நடத்தும் போலீஸார்

மேலும், 3 லாரி ஓட்டுநர்களுக்கு தலா நான்கு நாட்கள் சிறை தண்டனையும், 8 இரண்டு சக்கர வாகன ஓட்டிகளுக்கு தலா மூன்று நாட்கள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, அந்த 11 நபர்களும் திருச்சி மத்திய சிறைச்சாலை அனுப்பப்பட்டனர். "இதன்மூலம், 'மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது' என்று வாகன ஓட்டிகளுக்கு அச்சம் ஏற்படும். அதனால், இங்கு நடக்கும் பெருவாரியான விபத்துகள் குறையும். இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து செய்யப் போகிறோம்" என்று கரூர் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு