Published:Updated:

``நீ சிறுநீர் கழித்தால், எங்க ஊருக்கே தீட்டு'' - இளைஞரைத் தாக்கி சாதிய வன்கொடுமை செய்த கும்பல் கைது!

கௌசிக் மூன்றாம் ஆண்டு படித்துவருகிறார். தனது நண்பர்களான தினகரனுடனும் மற்றோர் இளைஞருடனும், கௌசிக் இரு சக்கர வாகனத்தில் பாகநத்தம் நெடுஞ்சாலையில் சென்றிருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கரூர், தான்தோன்றிமலை அருகிலுள்ள ஜல்லிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் கௌசிக் (21), தினகரன் (23). இவர்களில், தினகரன் அரசு கலைக் கல்லூரியில் படப்படிப்பு முடித்திருக்கிறார். கௌசிக் மூன்றாம் ஆண்டு படித்துவருகிறார். தனது நண்பர்களான தினகரனுடனும் மற்றோர் இளைஞருடனும், கௌசிக் இரு சக்கர வாகனத்தில் பாகநத்தம் நெடுஞ்சாலையில் சென்றிருக்கிறார். அப்போது, சிறுநீர் கழிப்பதற்காக வாகனத்தை கௌசிக் சாலையோரமாக நிறுத்தியிருக்கிறார்.

வெள்ளியணை
வெள்ளியணை
நாமக்கல்: மனைவி கண்முன்னே படுகொலை செய்யப்பட்ட முன்னாள் எம்.பி-யின் பேரன்! -  நடந்தது என்ன?

அப்போது, பாகநத்தம் பகுதியைச் சேர்ந்த சில மாற்றுச் சாதி இளைஞர்கள், கௌசிக், மற்ற இரண்டு இளைஞர்களின் சாதி விவரத்தைக் கேட்டு, ``சிறுநீர் கழிப்பதற்கு பட்டியல் சாதிப் பயலுகளுக்கு எங்கள் ஊர்தான் கிடைத்ததா? நீங்கள் இங்கே சிறுநீர் கழித்தால், ஊருக்கே தீட்டாயிரும்" என்று கூறி, மிரட்டியதாகச் சொல்லப்படுகிறது. இதனால், இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட, அந்தக் கும்பல் கௌசிக்கை சரமாரியாக கொலைவெறித் தாக்குதல் நடத்த ஆரம்பித்திருக்கிறது. இதனால், பயந்துபோன தினகரனும் மற்றோர் இளைஞரும் அங்கிருந்து தப்பித்துச் சென்றிருக்கிறார்கள். ஆனால், கௌசிக்கை அந்தக் கும்பல் தொடர்ந்து தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றிருக்கிறது. இதில் கௌசிக், படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இது குறித்து, வெள்ளியணை காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்திவருகின்றனர்.

மகாராஷ்டிரா: "சாதி காரணமாக எனக்கு வருவாய்த்துறை கிடைக்கவில்லை!"- பரபரப்பைப் பற்றவைத்த காங். அமைச்சர்

இது குறித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டரணி அமைப்பாளர் வழக்கறிஞர் ராஜா நம்மிடம்,

"கரூர் மாவட்டத்தில் சாதிய வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றன. வெள்ளியணை அருகேயுள்ள ஜல்லிப்பட்டி இளைஞர்கள் மீது சாதிப் பெயரைக் கேட்டு தாக்குதல் நடத்திய சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த விவகாரத்தில் கரூர் மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து, தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும்" என்றார். கௌசிக்கைத் தாக்கியதாக இரண்டு இளைஞர்களை போலீஸார் கைதுசெய்துள்ளனர். தப்பியோடிய மற்றவர்களையும் போலீஸார் தீவிரமாகத் தேடிவருகின்றனர். நெடுஞ்சாலையில் சிறுநீர் கழிக்க இருசக்கர வாகனத்தை நிறுத்திய இளைஞர்களை சாதிப் பெயரைச் சொல்லித் தாக்கிய சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு