Published:Updated:

கரூர்: லிஃப்ட் கேட்ட பெண்! - உதவிய கல்லூரி மாணவிக்கு பட்டப்பகலில் நேர்ந்த அதிர்ச்சி

காந்தி கிராமம்
காந்தி கிராமம் ( நா.ராஜமுருகன் )

மாணவி சுருதி நிவேதா கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், கரூர் நகர காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

லிஃப்ட் கேட்ட பெண்மணிக்கு தனது வாகனத்தில் இடம் கொடுத்த இளம்பெண்ணை மிரட்டி, அவரின் நகையை அந்தப் பெண்மணி பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கரூர் நகர காவல் நிலையம்
கரூர் நகர காவல் நிலையம்
நா.ராஜமுருகன்
கரூர்:  கிணற்றில் கிடந்த மாயமான சிறுவனின் உடல்! -  மர்ம மரணத்தால் அதிர்ச்சியில் உறவினர்கள்

கரூர், காந்திகிராமம் இ.பி.காலனி, எழில் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுருதி நிவேதா (வயது 21). கரூர், தான்தோன்றிமலையில் இயங்கிவரும் அரசு கலைக் கல்லூரியில் எம்.எஸ்சி முதலாமாண்டு படித்துவருகிறார். இவர் கரூர் வெங்கமேடு பகுதியிலிருந்து, கரூர் பேருந்து நிலையம் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது வெங்கமேடு பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், சுருதி நிவேதாவைக் கைகாட்டி மறித்திருக்கிறார். அதனால் வண்டியை ஸ்லோ செய்த சுருதி நிவேதாவிடம் அந்தப் பெண்மணி வாகனத்தில் லிஃப்ட் கேட்டிருக்கிறார். இதனால், சுருதி நிவேதா தனது வாகனத்தில் அந்தப் பெண்மணியை ஏற்றிக்கொண்டு, பேருந்து நிலையம் நோக்கிச் சென்றிருக்கிறார்.

காந்தி கிராமம்
காந்தி கிராமம்
நா.ராஜமுருகன்

வாகனம் வெங்கமேடு ரயில்வே மேம்பாலம் அருகே வந்தபோது, திடீரென கத்தியை காட்டி மிரட்டி சுருதி நிவேதா அணிந்திருந்த மூன்றே முக்கால் பவுன் தங்க நகை செயின், ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு, பின்னே வந்த இருசக்கர வாகனம் ஒன்றியில் தப்பித்துச் சென்றுவிட்டார். இது குறித்து, சுருதி நிவேதா கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், கரூர் நகர காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். பட்டப்பகலில் ஒரு பெண் வாகனத்தில் லிஃப்ட் கேட்டு, கத்தியைக் காட்டி நகையை ப்பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு