Published:Updated:

`முதலிரவு அறையில் மணப்பெண் வைத்த ரகசிய கேமரா’ - வீடியோ எடுத்து தொழிலதிபரை மிரளவைத்த மோசடித் தம்பதி

முதலிரவு அறையில் மணப்பெண் வைத்த ரகசிய கேமரா
முதலிரவு அறையில் மணப்பெண் வைத்த ரகசிய கேமரா ( மாதிரிப்படம் )

முதலிரவு நடப்பதற்கு முன்பே அப்பார்ட்மென்ட்டில் சிலர் ரகசிய கேமராவைப் பொருத்தியுள்ளனர். முதலிரவு நடந்த பின்னர் ரகசிய கேமராவிலிருந்து வீடியோவை காப்பி செய்திருக்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கேரள மாநிலம், கொச்சி கடவந்தறா பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ஸத்தார். பிசினஸ் செய்துவருகிறார். இவர் திருமணத்துக்காகப் பெண் தேடிக்கொண்டிருந்தார். இவருக்கு திருமணத் தரகர் மூலம் காசர்கோடு நாயன்மார்மூலை பகுதியைச் சேர்ந்த ஸாஜிதா (30) என்ற பெண் குறித்த தகவல் தெரியவந்திருக்கிறது. ஸாஜிதாவின் பெற்றோர் எனக் கூறிக்கொண்டு என்.ஏ.உம்மர் (41) அவரின் மனைவி பாத்திமா (35) ஆகியோர் அப்துல் ஸத்தரிடம் திருமணம் குறித்துப் பேசினர். தொடர்ந்து அவர்களுக்குத் திருமணத்தை நடத்திவைக்க நிச்சயிக்கப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 2-ம் தேதி அப்துல் ஸத்தாருக்கும் ஸாஜிதாவுக்கும் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பின்னர் இருவரையும் தங்கவைப்பதற்காக கொவ்வல்பள்ளியில் வாடகைக்கு அப்பார்ட்மென்ட் எடுத்தனர். அங்கு வைத்து அப்துல் ஸத்தாருக்கும் ஸாஜிதாவுக்கும் முதலிரவு நடந்திருக்கிறது.

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்

அவர்களுக்கு முதலிரவு நடப்பதற்கு முன்பே அப்பார்ட்மென்டில் ரகசிய கேமராவைப் பொருத்தியுள்ளனர். முதலிரவு நடந்த பின்னர் ரகசிய கேமராவிலிருந்து வீடியோவைவை காப்பி செய்திருக்கிறார்கள். அந்த வீடியோவை இக்பால் என்பவர் அப்துல் ஸத்தரிடம் காட்டி இதை நாங்கள் சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவோம் என மிரட்டி பணம், நகை ஆகியவற்றைக் கேட்டுள்ளனர். அவரும் முதலில் 3.75 லட்சம் ரூபாய், ஏழரை பவுன் தங்க நகை ஆகியவற்றைக் கொடுத்திருக்கிறார்.

அவர்கள் பணம், நகை வேண்டும் எனத் தொடர்ச்சியாக மிரட்டியதால் இது குறித்து அப்துல் ஸத்தார் காஞ்ஞங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீஸார் விசாரணை நடத்தியதில் இந்தத் திருமணமே போலித் திருமணம் எனத் தெரியவந்தது. இதையடுத்து அப்துல் ஸத்தாரை திருமணம் செய்த ஸாஜிதா, அவரின் பெற்றோர் எனக் கூறிய என்.ஏ.உம்மர், பாத்திமா, வீடியோவைக் காட்டி மிரட்டிய இக்பால் ஆகியோரை போலீஸார் கைதுசெய்தனர்.

ஸாஜிதா
ஸாஜிதா

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``என்.ஏ.உம்மர், பாத்திமா ஆகியோர் கணவன் மனைவிதான். ஆனால் அவர்கள் ஸாஜிதாவின் பெற்றோர் அல்ல. என்.ஏ.உம்மர் உள்ளிட்டோர் ஸாஜிதாவை போலியாக திருமணம் செய்துவைத்து அவர்களின் முதலிரவு நடக்கும் அறையிலும் ரகசிய கேமரா பொருத்தியுள்ளனர். பின்னர் அந்த வீடியோவைக் காட்டி அப்துல் ஸத்தாரை மிரட்டியுள்ளனர். ஸாஜிதா இது போன்று ஏற்கெனவே கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களில் திருமண மோசடியில் ஈடுபட்டிருப்பதாக வழக்கு உள்ளது" என்றனர்.

`10 பெண்களுடன் திருமணம்; ரூ.40 லட்சம் சீட்டிங்!'- போலி போலீஸ் எஸ்.ஐ சிக்கிய பின்னணி
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு