Published:Updated:

தண்ணீர் பக்கெட்டில் மூழ்கடித்து குழந்தை கொலை... 50 வயது பாட்டியின் இளம் ஆண் நண்பர் கைது

குழந்தையை கொலை செய்ததாக கைதுசெய்யப்பட்ட ஜாண் பினோய் டிக்றூஸ்

குழந்தைக்கு பால் கொடுக்கும்போது விக்கியதாக தெரிவித்திருக்கிறார் ஸிப்சி. இதையடுத்து களமசேரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தையின் உடலை பிரேதபரிசோதனை செய்தபோது, குழந்தை தண்ணீரில் மூழ்கி இறந்திருப்பது தெரியவந்தது.

தண்ணீர் பக்கெட்டில் மூழ்கடித்து குழந்தை கொலை... 50 வயது பாட்டியின் இளம் ஆண் நண்பர் கைது

குழந்தைக்கு பால் கொடுக்கும்போது விக்கியதாக தெரிவித்திருக்கிறார் ஸிப்சி. இதையடுத்து களமசேரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தையின் உடலை பிரேதபரிசோதனை செய்தபோது, குழந்தை தண்ணீரில் மூழ்கி இறந்திருப்பது தெரியவந்தது.

Published:Updated:
குழந்தையை கொலை செய்ததாக கைதுசெய்யப்பட்ட ஜாண் பினோய் டிக்றூஸ்

கேரள மாநிலம் கொச்சி அங்கமாலி பறக்கடவு பகுதியல்யைச் சேர்ந்தவர் சஜீவ். இவரின் மனைவி டிக்ஸி. இவர்களுக்கு 5, ஒன்றே முக்கால் வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளன. சஜீவ் ஒரு விபத்தில் சிக்கியதால் மருத்துவ சிகிச்சையில் உள்ளார். டிக்ஸி துபாய் நாட்டில் வேலை செய்துவருகிறார். இவர்களது குழந்தைகளை பாட்டி ஸிப்சி(50) (சஜீவின் தாய்) கவனித்து வந்தார். ஸிப்சிக்கும் பள்ளுருத்தி இ.எஸ்.ஐ சாலை பகுதியைச் சேர்ந்த ஜாண் பினோய் டிக்றூஸ் (26) என்பவருக்கும் நெருக்கமான பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை ஜாண் பினோய் டிக்றூஸ் உடன் ஸிப்சி கலூரில் ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார். ஸிப்சி தன்னுடன் இரண்டு குழந்தைகளையும் அழைத்துச் சென்றுள்ளார்.

சிசிடிவி-யில் பதிவான காட்சி
சிசிடிவி-யில் பதிவான காட்சி

இந்த நிலையில் செவ்வாய்கிழமை இரவு 10 மணியளவில் ஸிப்சி ஓட்டலில் இருந்து வெளியே சென்றுள்ளார். அந்த சமயத்தில் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாக ஜாண் பினோய் போனில் தகவல் தெரிவித்துள்ளார். நள்ளிரவு 2 மணியளவில் ஓட்டலுக்கு சென்ற ஸிப்சி குழந்தைகளை அழைத்துக்கொண்டு வெளியேறினார். அப்போது ஓட்டல் ஊழியர்கள் கேட்டதற்கு இரண்டாவது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை. மருந்து வாங்க செல்வதாக தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஓட்டலில் இருந்து வெளியே வந்தவர் தனியார் மருத்துவமனையில் குழந்தையை சேர்த்துள்ளார். குழந்தை இறந்ததாக தெரிவித்த மருத்துவர்கள் என்ன நடந்தது என கேட்டபோது, குழந்தைக்கு பால் கொடுக்கும்போது விக்கியதாக தெரிவித்திருக்கிறார் ஸிப்சி. இதையடுத்து களமசேரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்தபோது, குழந்தை தண்ணீரில் மூழ்கி இறந்திருப்பது தெரியவந்தது.

ஜாண் பினோய் டிக்றூஸ்
ஜாண் பினோய் டிக்றூஸ்

இதையடுத்து போலீஸார் ஓட்டல் சிசிடிவி காட்சியை கைப்பற்றி நடத்திய விசாரணையில் பாட்டி ஸிப்சியின் ஆண் நண்பர் ஜாண் பினோய் டிக்றூஸ் ஓட்டலில் வைத்து குழந்தையை பக்கெட்டில் இருந்த தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்தது தெரியவந்தது. ஜாண் பினோய் டிக்றூஸ் கைது செய்யப்பட்டார். ஜாண் பினோய் டிக்றூஸிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, ஸிப்சி ஓட்டலில் வைத்து தன்னிடம் பிரச்னை செய்ததாகவும், தன்னை பிரிந்துசெல்ல விடாமல் பொய் வழக்கில் சிக்கவைத்ததால் ஸிப்சியை பழிவாங்கவே குழந்தையை கொலை செய்ததாக கூறியிருக்கிறார். கொலையில் ஸிப்சிக்கு நேரடியாக தொடர்பு இல்லை, ஆனால் ஸிப்சிக்கு போதை பொருள் கடத்தலில் ஈடுபாடு உள்ளதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், கொலைச் செய்யப்பட்ட குழந்தையை காட்டி, இந்த குழந்தை உனக்கும் எனக்கும் பிறந்தது என அடிக்கடி சொல்லுவாராம். அதனால் அந்த குழந்தையை கொலை செய்ய ஜாண் பினோய் டிக்றூஸ் முடிவு செய்ததாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. பாட்டியின் பழக்கத்தால் பேரக் குழந்தையின் உயிர் பறிபோன சம்பவம் கேரளத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism