Published:Updated:

கரூர்: நர்ஸிங் மாணவிக்குப் பாலியல் தொந்தரவு... கல்லூரி முதல்வர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு

குளித்தலை ( நா.ராஜமுருகன் )

நர்ஸிங் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கல்லூரி முதல்வர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கரூர்: நர்ஸிங் மாணவிக்குப் பாலியல் தொந்தரவு... கல்லூரி முதல்வர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு

நர்ஸிங் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கல்லூரி முதல்வர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
குளித்தலை ( நா.ராஜமுருகன் )

கரூர் மாவட்டம், குளித்தலை ரயில் நிலையம் அருகே தனியார் நர்ஸிங் கல்லூரி ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்தக் கல்லூரியில் கடந்த ஆண்டு முதல் விடுதியில் தங்கிப் படித்துவந்த ஒரு மாணவிக்கு, அந்த நர்ஸிங் கல்லூரியின் முதல்வரான குளித்தலை காவிரிநகர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் செந்தில்குமார், பாலியல் தொந்தரவு கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. இப்படி, பலமுறை பாலியல் தொந்தரவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதோடு, செந்தில் குமார் அந்த மாணவியிடம், 'இது பற்றி யாரிடமும், எதுவும் சொல்லக் கூடாது. அதையும் மீறிச் சொன்னால், உன்னைக் கொன்னுடுவேன்' என்று அந்த மாணவியை மிரட்டி, திட்டித் தாக்கியதாகவும் சொல்கிறார்கள். செந்தில் குமாரின் இந்த மோசமான செயலுக்கு, அந்தக் கல்லூரியின் விடுதிக் காப்பாளராகப் பணிபுரியும் அமுதவள்ளி, சமையலர் மகா இரண்டு பேரும் உடந்தையாக இருந்துள்ளனர் என்றும் சொல்லப்படுகிறது.

குளித்தலை
குளித்தலை
நா.ராஜமுருகன்

இதனால், மனஉளைச்சலில் சிக்கித் தவித்த அந்த மாணவி, கல்லூரி முதல்வர் தனக்குப் பாலியல் தொந்தரவு செய்ததாகவும், அதற்கு அங்கு பணிபுரியும் இரண்டு பெண்கள் உடந்தையாக இருந்ததாகவும், கரூர் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார். அந்த மாணவி குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், மாணவியைப் பாலியல் தொந்தரவு செய்து, கொலை மிரட்டல் விடுத்த வழக்கறிஞர் செந்தில்குமார், அமுதவல்லி, மகா மூன்று பேர் மீதும் போக்சோ உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.

அதோடு, கைது நடவடிக்கைக்கு பயந்து தலைமறைவாக உள்ள அந்த மூன்று பேரையும் போலீஸார் தேடிவருகின்றனர். செந்தில்குமார் தற்போது நோட்டரி பப்ளிக் வக்கீலாகவும், அதிமுக பிரமுகராகவும் இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. நர்ஸிங் கல்லூரி மாணவிக்கு அந்தக் கல்லூரி முதல்வரே பாலியல் தொந்தரவு கொடுத்துள்ள சம்பவம், பொதுமக்களிடம் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism