Published:Updated:

``லஞ்சம் வாங்கிட்டு மணல் வண்டியைப் பிடிக்கலாமா?'' போலீஸாரைத் திட்டிய நபர் மீது வழக்கு பதிவு!

போலீஸ் ஸ்டேஷன் முன்பு இளையராஜா
போலீஸ் ஸ்டேஷன் முன்பு இளையராஜா

``ஒரு நைட் 30 வண்டியில் மணல் கடத்தினா ரூ.1 லட்சம் வரை லஞ்சம் கொடுக்கிறேன். நான் கொடுக்குற பணத்தை போலீஸ் பிரிச்சுக்கிறீங்க. அப்புறம் ஏன் கேஸ் போட்டீங்க...’’ என இளைஞர் தகாத வார்த்தைகளில் பேசியிருக்கிறார் எனச் சொல்லப்படுகிறது.

கும்பகோணம் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட நபர் ஒருவர் போலீஸுக்கு லஞ்சம் கொடுத்துவிட்டு மணல் எடுத்ததாகவும், பணத்தையும் வாங்கிக்கொண்டு, தன் வண்டியைப் பறிமுதல் செய்து, தன்மீது வழக்கும் பதிவிட்டதாக போலீஸ் ஸ்டேஷன் முன் நின்று போலீஸாரைத் தகாத வார்த்தைகளில் பேசி, அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

600 கோடி மோசடி புகார்; தலைமறைவாக இருந்த `ஹெலிகாப்டர் சகோதரர்கள்' புதுக்கோட்டையில் கைது!

கும்பகோணம், பந்தநல்லுார் அருகேயுள்ள குலசேகரநல்லுார், வடக்குத்தெருவைச் சேர்ந்தவர் இளையராஜா (34). அவர் அந்தப் பகுதியிலுள்ள ஆற்றில் சட்டத்துக்கு விரோதமாக மணல் கடத்திவருவதாகச் சொல்லப்படுகிறது. அதற்கு பந்தநல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் போலீஸாருக்கு மாமூல் கொடுத்துவந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு நாளைக்கு 30 வண்டிகள் வரை மணல் கடத்திவந்ததாகவும், அதற்கு ஒரு வண்டிக்கு ரூ.10,000 வீதம் போலீஸ் தரப்புக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்ததாகவும் இளையராஜா கூறியிருக்கிறார். இந்தநிலையில் மணல் கடத்தியதாக இளையராஜா மீது பந்தநல்லூர் போலீஸார் வழக்கு பதிவு செய்ததுடன், அவருக்குச் சொந்தமான மூன்று டிராக்டர்களை பறிமுதல் செய்தனர். இதில் கோபமடைந்த இளையராஜா, பந்தநல்லுார் போலீஸ் நிலையத்துக்கு வந்ததுடன், போலீஸ் குறித்து தகாத வார்த்தைகள் பேசி செல்ஃபி வீடியோ எடுத்து அதைச் சமூக வலைதளங்களில் வெளியிட்டார். மணல் கடத்தலில் ஈடுபட்ட நபர் ஒருவர் போலீஸாரைத் தரக்குறைவாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், ``நான் உங்ககிட்ட சொல்லித்தான் மணல் கடத்தினேன். அப்புறம் எதற்காக என் வண்டிகளைப் பறிமுதல் செய்தீர்கள்... போலீஸ் என்னிடம் `மணல் ஒட்டாதே...’ என்றால் நிறுத்திக்கொள்கிறேன். நான் கொரோனாவில் இருக்கிறேன் போயிட்டு வந்து உங்களையெல்லாமல் முடித்துவிடுகிறேன். நான் நைட் முழுவதும் கண் விழிச்சு, லட்சம் லட்சமாக இன்ஸ்பெக்டர் கிட்ட கொடுத்தேன்" என்பதாக அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.

போலீஸ் ஸ்டேஷன் முன்பு இளையராஜா
போலீஸ் ஸ்டேஷன் முன்பு இளையராஜா

இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பந்தநல்லூர் போலீஸ் தரப்பில் பேசினோம். ``பந்தநல்லூர் ஸ்டேஷனுக்கு இன்ஸ்பெக்டரே கிடையாது. அருகேயுள்ள ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்தான் இதையும் கவனித்துக்கொள்கிறார். மணல் கடத்திய வண்டியைப் பறிமுதல் செய்த கோபத்தில் தகாத வார்த்தைகளில் பேசியிருக்கிறார். தனக்கு கொரோனா இருக்கிறது, இப்போது பேசினால் தன்னை எதுவும் செய்ய முடியாது என்பதால் இப்படிச் செய்திருக்கிறார். அவர்மீது வழக்கு பதிவு செய்திருக்கிறோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு