Published:Updated:

சாலையில் கிடந்த பாலியல் தொழிலாளியின் சடலம்; கைதான கணவன், மனைவி; நடந்தது என்ன?

போலீஸார் விசாரணை நடத்தியதில் கொலைசெய்யப்பட்டவர் பாலியல் தொழிலாளி என்று தெரியவந்தது.

மத்தியப்பிரதேசத்திலுள்ள குவாலியர் என்ற இடத்தைச் சேர்ந்தவர் பந்து பதுரியா. இவரின் மனைவி மம்தா. இவர்களுக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகின்றன. இந்தத் தம்பதிக்கு குழந்தையில்லாத காரணத்தால், குழந்தை வரம் வேண்டி கோயில்களுக்குச் சென்று வந்தனர். மம்தாவின் சகோதரியான மீராவின் நண்பர் நீரஜ், பந்து-மம்தா தம்பதியை கிர்வார் யாதவ் என்ற பில்லி சூனியம் வைக்கும் சாமியாரிடம் அழைத்துச் சென்றார். ``உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவேண்டுமானால் நரபலி கொடுக்க வேண்டும்'' என்று யாதவ், மம்தாவிடம் தெரிவித்தார். இந்த நிலையில் கடந்த 21-ம் தேதி பெண் ஒருவரின் சடலம் குவாலியரில் கிடைத்திருக்கிறது. அதைக் கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தியதில் கொலைசெய்யப்பட்டவர் பாலியல் தொழிலாளி என்று தெரியவந்தது. இதையடுத்து மேற்கொண்டு போலீஸார் விசாரணை நடத்தியதில் அந்தப் பெண்ணை நீரஜ் அழைத்துச் சென்றது தெரியவந்தது.

``உன்னை நரபலி கொடுக்கப் போகிறேன்" மந்திரவாதியுடன் வீட்டுக்கு வந்த கணவன்; அதிர்ந்த மனைவி!
murder
murder

அந்தப் பெண்ணை நீரஜ், கழுத்தை நெரித்துக் கொலை செய்திருக்கிறார். பின்னர் அந்தப் பெண்ணின் சடலத்தைத் தனது பைக்கில் ஏற்றிக்கொண்டு, பூஜை செய்வதற்காக யாதவிடம் கொண்டு சென்றிருக்கிறார். அப்போது விபத்து ஏற்படவே, பயந்துபோன நீரஜ் சம்பவ இடத்தில் சடலத்தை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கிறார். மேற்கொண்டு போலீஸ் நடத்திய விசாரணையில், நீரஜ் ஒரு வாரத்துக்கு முன்பே வேறொரு பாலியல் தொழிலாளியை இதேபோலக் கொலை செய்திருப்பது தெரியவந்திருக்கிறது. இதையடுத்து மம்தா, அவருடைய கணவர் பந்து, மம்தாவின் சகோதரி மீரா, மீராவின் ஆண் நண்பர் நீரஜ், சாமியார் யாதவ் ஆகிய ஐந்து பேரும் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். சாமியார் யாதவ், ``நான் நரபலி கொடுக்கவில்லை" என்று தெரிவித்திருக்கிறார். போலீஸார் கைதுசெய்தவர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு