Published:Updated:

பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்த பெண், பழிவாங்க மீண்டும் நடந்த கொடுமை; அதிர்ச்சி சம்பவம்!

பாலியல் வன்கொடுமை முயற்சி ( சித்திரிப்புப் படம் )

பாலியல் வன்கொடுமை புகாரை திரும்ப பெறக்கோரி, நண்பருடன் சேர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணை மீண்டும் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய கொடுமை... சம்பவம் நடந்து ஒரு மாதம் கழித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்திருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பாலியல் வன்கொடுமை குற்றங்கள் பெரும்பாலும் தெரிந்த அல்லது உறவினர்கள் மூலம் நடக்கின்றன. இதனால் அதிகமான குற்றங்கள் வெளியில் வராமல் போய்விடுகின்றன. எனவே குற்றவாளிகளுக்கு அது சாதகமாக போய்விடுகிறது. மத்திய பிரதேசத்தில் அது போன்ற ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது.

ஜபல்பூர் என்ற இடத்தில் வசிக்கும் விவேக் பட்டேல் என்பவர், அதே பகுதியை சேர்ந்த 17 வயது பெண்ணை கடந்த 2020-ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்தார். இது தொடர்பாக அப்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் விவேக் கைது செய்யப்பட்டார். ஓர் ஆண்டு சிறைக்கு பிறகு கடந்த ஆண்டு விவேக் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
சித்திரிப்புப் படம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜாமீனில் வெளி வந்த விவேக் ஒரு மாதத்திற்கு முன்பு தன் நண்பருடன் சேர்ந்துகொண்டு, ஏற்கெனவே பாலியல் வன்கொடுமை செய்த பெண்ணின் வீட்டிற்குள் மீண்டும் அத்துமீறி நுழைந்தார். வீட்டில் தனியாக இருந்த அந்தப் பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி தன் நண்பருடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அதனை தனது மொபைல் போனில் வீடியோவும் எடுத்துக் கொண்டார். மேலும், ’ஏற்கெனவே கொடுத்த பாலியல் வன்கொடுமை புகாரை திரும்ப பெறவில்லையெனில் தற்போது எடுக்கப்பட்டுள்ள வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன்’ என்று மிரட்டிவிட்டு வந்தார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் விசாரித்து வந்த போலீஸார் இப்போதுதான் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். சம்பவம் நடந்து ஒரு மாதம் கழித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்திருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.