Published:Updated:

மதுரையில் கொடூரம் : `13 வயது சிறுமி; 3 வருடங்கள்..! - பாலியல் தொழிலில் தள்ளிய உறவினர்

சிறுமியைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியவர்கள்
சிறுமியைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியவர்கள்

பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபர்களையும் கைதுசெய்ய காவல்துறையினர் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

மதுரையில் ஆதரவற்ற சிறுமியை கடந்த மூன்று வருடங்களாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடூர சம்பவத்தில் ஐந்து பெண்களை காவல்துறையினர் கைதுசெய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சிறார் வதை
சிறார் வதை

மதுரையைச் சேர்ந்த அந்தச் சிறுமிக்கு (13 வயது). தந்தை இல்லாத நிலையில், தாயும் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்திருக்கிறார். குடும்பத்தின் ஏழ்மை நிலையைப் பயன்படுத்திக்கொண்ட உறவினர் பெண் ஜெயலட்சுமி என்பவர், நான் வளர்க்கிறேன் என்று கடந்த 2015-ல் சிறுமியை அழைத்துச் சென்றிருக்கிறார். ஆனால், அவரோ அந்தச் சிறுமியைப் பாலியல் தொழிலில் ஈடுபட கட்டாயப்படுத்தியிருக்கிறார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில், பாலியல் தரகர்களாகச் செயல்பட்டுவரும் அனார்கலி, சுமதி, ஐஸ் சந்திரா, தங்கம், சரவணபிரபு, சின்னதம்பி ஆகியோருடன் சேர்ந்து மதுரை மட்டுமன்றி, பல இடங்களுக்கு அந்தச் சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தியிருக்கிறார்கள்.

சிறுமி பாலியல் வன்கொடுமை
சிறுமி பாலியல் வன்கொடுமை
Representational Image

இந்தநிலையில், இது தொடர்பாக ஆள்கடத்தல் தடுப்பு காவல்துறையினருக்கு புகார் சென்றதை அடுத்து, சிறுமியின் உறவினரான ஜெயலட்சுமி உள்ளிட்ட ஐந்து பெண் தரகர்களைத் தேடிவந்தனர்.

மதுரை உத்தங்குடி அருகேயுள்ள ஒரு வாடகை வீட்டில் ஆள் கடத்தல், விபசார தடுப்புப் பிரிவு ஆய்வாளர் ஹேமமாலா தலைமையிலான தனிப்படையினர் சென்று சிறுமியை மீட்டு, சரவணபிரபு என்பவரையும், சிறுமியைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ஜெயலட்சுமி, சுமதி, ஐஸ் சந்திரா உள்ளிட்ட ஐந்து பெண் தரகர்களையும் கைதுசெய்தனர். அவர்களை போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளனர்.

சிறுமியைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியவர்கள்.
சிறுமியைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியவர்கள்.

சிறுமியிடம் நடத்திய விசாரணையில், பாதிக்கப்பட்ட சிறுமியை 600-க்கும் மேற்பட்ட நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தெரியவந்திருக்கிறது. பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபர்களையும் கைதுசெய்ய காவல்துறையினர் தீவிர நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார்கள். சிறுமியை வளர்ப்பதாக அழைத்துச் சென்று பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்திய சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு