Published:Updated:

மத்திய பிரதேசம்:`திருமணம் மீறிய உறவு? ; ஒரே குடும்பத்தில் 5 பேர் கொடூரக் கொலை!' - அதிரவைத்த சம்பவம்

கொலை

காணாமல்போனதாக சொல்லப்பட்ட குடும்பத்தினர், உண்மையில் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது முதலில் உறுதியானது.

மத்திய பிரதேசம்:`திருமணம் மீறிய உறவு? ; ஒரே குடும்பத்தில் 5 பேர் கொடூரக் கொலை!' - அதிரவைத்த சம்பவம்

காணாமல்போனதாக சொல்லப்பட்ட குடும்பத்தினர், உண்மையில் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது முதலில் உறுதியானது.

Published:Updated:
கொலை

மத்திய பிரதேச மாநிலத்தின் தேவாஸ் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு நிலத்துக்கு அடியில் 10 அடி ஆழத்தில் புதைக்கப்பட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை மாலை போலீஸார் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் தோண்டிப் பார்த்தபோது அங்கு 5 சடலங்கள் மிகவும் மோசமான நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

இந்த கொலைச் சம்பவம் எதற்காக நடந்தது?, எப்படி நிகழ்த்தப்பட்டது?, இதில் யாரெல்லாம் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதை கண்டறிய போலீஸார் நடத்திய தீவிரமான விசாரணையில் பல பரபரப்பான உண்மைகள் வெளிவந்து அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலை
கொலை

மத்திய பிரதேச மாநிலத்தின் தேவாஸ் மாவட்டத்திலுள்ள நெமாவார் பகுதியில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மம்தா (45), அவர்களது இரண்டு மகள்களான ரூபாளி (21), திவ்யா (14) மற்றும் அவர்களது உறவினர்களான பூஜா ஓஸ்வால் (15) மற்றும் பவண் ஓஸ்வால் (14) ஆகியோர் கடந்த மே மாதம் 13-ம் தேதி காணாமல்போனதாக புகார் எழுந்தது. அதையடுத்து, தேவாஸ் நகர காவல்துறை அதிகாரி ஷிவ் தயாள் சிங் தலைமையிலான போலீஸ் படை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

கொடூர கொலையின் பின்னணி!

தொடக்கத்தில் அவர்களது பிற குடும்பத்தினர் மற்றும் அருகாமை குடியிருப்பில் வசித்து வருபவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அவர்கள் வசித்துவந்த வீட்டின் உரிமையாளர் சுரேந்திர சவுகான் மீது போலீஸாருக்கு பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதைத்தொடர்ந்து, இச்சம்பவத்தில் காணாமல்போன குடும்பத்தினருள் முக்கியமானவரான ரூபாளி என்பவரின் போன் அழைப்புகளை போலீஸார் கைப்பற்றி அதிலுள்ள அழைப்புகள், மற்றும் அவரது சமூக வலைதள பதிவுகளை ஆய்வு செய்ததில் சுரேந்திர சவுகான் மீது ஏற்பட்ட சந்தேகம் உறுதியானது.

இதன்பிறகு, போலீஸாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தது. அதில் காணாமல்போனதாக சொல்லப்பட்ட குடும்பத்தினர், உண்மையில் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது முதலில் உறுதியானது. இதனால் போலீஸார் விசாரணையை மேலும் தீவிரப்படுத்தினர். அதில், கொலைசெய்யப்பட்ட ரூபாளியின் குடும்பத்தினர் வசித்து வந்த வீட்டின் உரிமையாளர் தான் இந்த சுரேந்திர சவுகான். அதனால் ரூபாளியின் குடும்பத்தினரோடு மிகவும் நெருக்கமான தொடர்பில் இருந்துள்ளார்.

கொலை
கொலை

அங்கு ஏற்கனவே திருமணமாகியிருந்த ரூபாளியுடன், சுரேந்திர சவுகான் நெருங்கிய உறவில் இருந்து வந்துள்ளார். திருமணம் ஆகாத சவுகான் ஒருபுறம் ரூபாளியுடன் நெருங்கிய உறவில் இருந்துகொண்டே மறுபுறம் தனக்கு வேறு ஒரு பெண்ணை மணம் முடிக்கும் வேலைகளில் இறங்கியுள்ளார். இதையறிந்து மிகவும் கோபமடைந்த ரூபாளி, சவுகான் மணம் முடிக்கயிருந்த பெண்ணின் புகைப்படத்தை, அவரது தொலைபேசி எண்ணுடன் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிடட்டு அவமானப்படுத்தியுள்ளார். இதனால் சவுகானுக்கு நடைபெறவிருந்த திருமண நிச்சயதார்த்தம் திடீரென நின்றுபோனது.

இவ்விவகாரம் இருவருக்குமிடையில் மேலும் மோதலை ஏற்படுத்தியது. ஒருகட்டத்தில் பொறுமையை இழந்த சுரேந்திர சவுகான் கடந்த மே 13ம் தேதியன்று ரூபாளியின் உறவினரான பவண் ஒஸ்வால் மூலம் ரூபாளியை தனது விவசாய நிலமிருக்கும் பகுதிக்கு வரவழைத்துள்ளார். அங்கு வந்த ரூபாளியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர், தனது திருமணம் தடைபட மொத்த குடும்பமும் தான் காரணம் என்பதை அறிந்தவர், அன்றிரவே குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் கொலைசெய்து தனது விவசாய நிலமிருக்கும் பகுதியில் புதைத்துவிட்டார்.

பெண் கொலை
பெண் கொலை

அதிலும் அவர் கொலைசெய்த உடல்கள் விரைவாக அழுக வேண்டும் என்பதற்காக உப்பையும், யூரியாவையும் கொண்டு மூடியுள்ளார். அதேபோல், போலீஸாரின் விசாரணையில் செய்தது கொலை என்பது அம்பலப்பட்டுவிடாமலிருக்க ரூபாளியின் சமூக வலைதள கணக்குகளிலிருந்து, “நானும், எனது குடும்பத்தாரும் நலமாக உள்ளோம்” போன்ற பதிவுகளை பதிவிட்டு விசாரணையை திசைதிருப்பும் நோக்கில் செயல்பட்டு வந்துள்ளார் சவுகான். இதில் கொலை செய்யப்பட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கொலைச் சம்பவத்தில் சுரேந்திர சவுகான் மட்டுமல்லாது மேலும் சிலர் அவருக்கு துணைபோனது தெரியவந்துள்ளது. அதில் சுரேந்திர சவுகான் உட்பட இதுவரை ஆறுபேரை தேவாஸ் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சம்பந்தப்பட்ட மேலும் சிலர் தலைமறைவாகியுள்ளதால் போலீஸார் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism