Published:Updated:

நாக்பூர்: குடும்பத்தில் அடிக்கடி சண்டை; மனைவி, மகளைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்த நபர்

கொலை

மகாராஷ்டிராவில் வேலை இல்லாத ஒருவர், தன்னுடைய மனைவியையும் மகளையும் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தானும் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

நாக்பூர்: குடும்பத்தில் அடிக்கடி சண்டை; மனைவி, மகளைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்த நபர்

மகாராஷ்டிராவில் வேலை இல்லாத ஒருவர், தன்னுடைய மனைவியையும் மகளையும் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தானும் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

Published:Updated:
கொலை

மகாராஷ்டிரா மாநிலத்தின் இரண்டாவது தலைநகரமான நாக்பூர் ராஜீவ் நகரில் வசித்துவந்தவர் விலாஸ் காவ்டே (51). இவரின் மனைவி ரஞ்சனா. இவர்களுக்கு மூன்று பிள்ளைகள். இவர்களில் மூத்த பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்துவிட்டனர். விலாஸ் காவ்டேவுக்கு வேலை இல்லை. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுக்கொண்டேயிருந்தது. இதனால் விரக்தியடைந்த விலாஸ் இரவு மனைவியும் மகளும் உறங்கிய பிறகு தலையணையால் முகத்தை மூடி இருவரையும் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார். பின்னர் வீட்டுக்கு வெளியில் சென்று அங்கிருந்த மரத்தில் தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கொலை
கொலை

காலையில் விலாஸ் மகன் எழுந்தபோதுதான் வீட்டில் தன்னுடைய தாயாரும் சகோதரியும் ரத்த வெள்ளத்தில் இறந்துகிடப்பதைப் பார்த்தார். உடனே அவர்களின் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் வசிக்கும் தன் சித்தப்பாவிடம் விலாஸ் மகன் நடந்த சம்பவம் குறித்துத் தெரிவித்தார். அவர்கள் வந்து பார்த்தபோது விலாஸ் மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் விரைந்துவந்து பிரேதங்களைக் கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

தன் தாயாருக்கு அருகில் படுத்திருந்த மகனைக் கொலை செய்யாமல் விட்டிருந்தார். மகன் எழுந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் இருவரின் முகத்திலும் தலையணையை வைத்துக்கொண்டு, கழுத்தைக் கத்தியால் அறுத்ததாக போலீஸார் தெரிவித்தனர். அடிக்கடி மனைவியுடன் மட்டுமல்லாமல் பக்கத்து வீட்டுக்காரர்களுடனும் சண்டை போடுவார் என்று விலாஸ் சகோதரர் கன்பத் தெரிவித்தார். சமீபகாலமாக விலாஸ் மனரீதியாக பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டதாவும் கன்பத் தெரிவித்தார். இது குறித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism